'லூசிஃபர்' ரீமேக்: சிரஞ்சீவியை மீண்டும் இயக்குகிறாரா விவி விநாயக்?

By செய்திப்பிரிவு

மலையாளத்தில் ஹிட்டடித்த 'லூசிஃபர்' படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி நடிக்கிறார். இதனை விவி விநாயக் இயக்குவதாகக் கூறப்படுகிறது. ஆனால், இதனை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியான 'லூசிஃபர்' திரைப்படம் மலையாளத் திரைப்பட உலகில் பல வசூல் சாதனைகளைப் படைத்தது. 'மொழி', 'காவியத் தலைவன்' உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் நடித்த நடிகர் ப்ரித்விராஜின் இயக்கத்தில் வெளியான முதல் படம் இது. மலையாளத்தில் 200 கோடி ரூபாய் வசூலைக் குவித்த முதல் படம் 'லூசிஃபர்' என்பது கவனிக்கத்தக்கது.

இந்தப் படம் தமிழில் டப்பிங் செய்து வெளியானாலும், தெலுங்கில் வெளியாகவில்லை. இந்தப் படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை சிரஞ்சீவி வாங்கினார்.

இந்நிலையில் 'லூசிஃபர்' ரீமேக்கை விவி விநாயக் இயக்கப் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. அவர் இதற்கு ஒப்புக்கொள்வார் என்றும் கூறப்படுகிறது. சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் இப்படத்தைத் தயாரிக்கிறார்.

முன்னதாக, 'ரங்கஸ்தலம்' இயக்குநர் சுகுமார் 'லூசிஃபர்' படத்தை தெலுங்கில் ரீமேக் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரீமேக் படத்தை இயக்க விருப்பமில்லை என்று சுகுமார் தெரிவித்ததால் அந்த வாய்ப்பு விவி விநாயக் வசம் சென்றுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தமிழில் வெளியான 'ரமணா' படத்தை 'தாகூர்' என்றும், 'கத்தி' படத்தை 'கைதி 150' என்றும் தெலுங்கில் ரீமேக் செய்தவர் விவி விநாயக் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது கொரட்டலா சிவா இயக்கத்தில் உருவாகி வரும் 'ஆச்சாரியா' படத்தில் சிரஞ்சீவி நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் அரங்குகள் அமைத்து நடைபெற்று வருகிறது. இதனையடுத்து 'லூசிஃபர்' ரீமேக்கில் சிரஞ்சீவி நடிக்கவுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

22 mins ago

தமிழகம்

22 mins ago

தொழில்நுட்பம்

45 mins ago

சினிமா

1 hour ago

வாழ்வியல்

45 mins ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

வணிகம்

1 hour ago

சினிமா

1 hour ago

கருத்துப் பேழை

2 hours ago

உலகம்

1 hour ago

வணிகம்

1 hour ago

மேலும்