பிக் பாஸ் தெலுங்கில் போட்டியாளராக பாபா பாஸ்கர்

By செய்திப்பிரிவு

பிக் பாஸ் தெலுங்கின் மூன்றாவது சீசனில், நடன இயக்குநர் மற்றும் இயக்குநர் பாபா பாஸ்கர் போட்டியாளராகப் பங்கேற்றுள்ளார்.

'பிக் பாஸ்' ரியாலிட்டி நிகழ்ச்சி இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், வங்காளம், மராத்தி என பல மொழிகளில் நடத்தப்படுகிறது. அந்தந்த மாநிலத்தில் பிரபல சேனல்களில் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

தெலுங்கில், 'பிக் பாஸ்' முதல் சீசனை நடிகர் ஜூனியர் என்.டி.ஆரும், இரண்டாவது சீசனை நடிகரி நானியும் தொகுத்து வழங்கினர். தற்போது மூன்றாவது சீசனை நடிகர் நாகார்ஜுனா தொகுத்து வழங்குகிறார். ஞாயிற்றுக்கிழமை இதன் ஒளிபரப்பு தொடங்கியது. 

இதில், தமிழ் சினிமாவில் பிரபல நடன இயக்குநரும், 'குப்பத்து ராஜா' திரைப்படத்தின் மூலம் இயக்குநராகவும் மாறிய பாபா பாஸ்கர் ஒரு போட்டியாளராகப் பங்கேற்றுள்ளார். இவர் தெலுங்கு சினிமாவிலும் பல பாடல்களுக்கு நடன இயக்கம் செய்துள்ளார். 'தீ' என்ற நடன ரியாலிட்டி நிகழ்ச்சியில் இவர் நடுவராகப் பங்கேற்றதன் மூலம் அங்கு பிரபலமானார். மேலும் சமீபத்தில் 'கேஷ்' என்ற தொலைக்காட்சி கேம் ஷோவிலும் இவர் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

சினிமா

6 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

சினிமா

11 hours ago

இந்தியா

12 hours ago

மேலும்