ஷூட்டிங்கிற்காக புகைபிடித்தத தெலுங்கு நடிகர் ராம் பொதினேனிக்கு ரூ.200 அபராதம்

By செய்திப்பிரிவு

வரலாற்றுப் புகழ்பெற்ற சார்மினார் நினைவுச் சின்னம் அருகே திரைப்படப் படப்பிடிப்புக் காட்சிக்காக சிகரெட் பிடித்ததற்காக தெலுங்கு நடிகர் ராம் பொதினேனிக்கு போலீஸார் ரூ.200 அபராதம் விதித்தனர்.

 

அவர் ‘ஐ ஸ்மார்ட் ஷங்கர்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார் தெலுங்கு நட்சத்திரம் ராம். அப்போது ஹைதராபாத்தின் நினைவுச் சின்னமாகக் கருதப்படும் உலகப் புகழ்பெற்ற சார்மினார் அருகே புகைப்பிடிப்பது போல் காட்சி அமைக்கப் பட்டிருந்தது.

 

அவர் சிகரெட்டைப் பற்ற வைத்து இழுத்த போது ஹைதராபாத் போலீஸார் பொது இடத்தில் சிகரெட் பிடித்த குற்றத்திற்காக அவருக்கு ரூ.200 அபராதம் விதித்தது. 

 

அதாவது புகைப்பிடிக்கத் தடை செய்யப்பட்டிருந்த இடத்தில் அவர் சிகரெட்டைப் பற்றவைத்தார்.  ரூ.200 அபராதம் விதிக்கப்பட  அபராதத் தொகையை நடிகர் ராம் செலுத்தினார்.

 

சார்மினார் அருகே தடைசெய்யப்பட்ட பகுதியில் புகைப்பிடித்ததற்காக இதுவரை 20 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் உயரதிகாரி பி.பாண்டே தெரிவித்தார்.

 

ஐ ஸ்மார்ட் ஷங்கர் என்ற இந்தத் திரைப்படத்தை பூரி ஜகநாத் இயக்குகிறார். நபா நடேஷ், நிதி அகர்வால் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.  படத்துக்கு மணி சர்மா இசையமைக்க ராஜ் தோடா ஒளிப்பதிவு செய்கிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

இந்தியா

3 hours ago

வலைஞர் பக்கம்

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

5 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

5 hours ago

இந்தியா

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

மேலும்