கிறிஸ்டோபர் நோலனின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு

By செய்திப்பிரிவு

இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஹாலிவுட்டின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் கிறிஸ்டோபர் நோலன். இவர் இயக்கிய ‘மெமண்டோ’, ‘ப்ரஸ்டீஜ்’, ‘இன்செப்ஷன்’, ‘இண்டெர்ஸ்டெல்லார்’ உள்ளிட்ட படங்கள் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றவை. திரைக்கதை அமைப்பில் தனக்கென்று ஒரு தனி முத்திரை பதித்தவர் நோலன்.

கடைசியாக கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய ‘டெனெட்’ திரைப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் தற்போது தனது அடுத்த படத்துக்கான பணிகளை தொடங்கிவிட்டார் நோலன். இப்படம் இரண்டாம் உலகப் போரின் போது அணு குண்டு தயாரிக்க உதவிய அமெரிக்க இயற்பியலாளர் ஜே.ராபர்ட் ஒப்பன்ஹெய்மரைப் பற்றிப் பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்துக்காக ஹாலிவுட்டின் பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் சிலவற்றோடு நோலன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளாதாக கூறப்படுகிறது.

வழக்கமாக நோலன் படங்களை தயாரிக்கும் வார்னர் ப்ரதர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவில்லை என்று தெரிகிறது. வார்னர் ப்ரதர்ஸ் நிறுவனம் தனது படங்களை நேரடியாக ஓடிடியில் வெளியிடுவது குறித்து கடந்த ஆண்டு நோலன் ஒரு பேட்டியில் தனது அதிருப்தியை தெரிவித்திருந்தார். இதுவே வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்துக்கும் நோலனுக்கு இடையே காரணமாக இருக்கலாம் என்று ஹாலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

5 hours ago

சினிமா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

வணிகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

க்ரைம்

9 hours ago

சுற்றுச்சூழல்

10 hours ago

க்ரைம்

10 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்