'தோர்: லவ் அண்ட் தண்டர்' படத்தில் இணைந்த ரஸ்ஸல் க்ரோ

By செய்திப்பிரிவு

'தோர்: லவ் அண்ட் தண்டர்' படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் ரஸ்ஸல் க்ரோ ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

மார்வெல் சினிமா உலகின் நான்காவது கட்டத்தில் வெளியாகவுள்ள படங்களின் வேலைகள் தொடங்கி நடந்து வருகின்றன. இதில் அடுத்த ஆண்டு 'தோர்' படத்தின் நான்காவது பாகமான 'தோர்: லவ் அண்ட் தண்டர்' திரைப்படம் வெளியாகவுள்ளது.

'தோர் ரக்னராக்' படத்தின் இயக்குநர் டைகா வைடிடி இந்தப் படத்தை இயக்குகிறார். கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் மீண்டும் தோர் கதாபாத்திரத்திலும், டெஸ்ஸா தாம்ஸன் வால்கைரீ கதாபாத்திரத்திலும் நடிக்கவுள்ளனர். இப்படத்தின் வில்லனான கோர் தி பட்சர் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் கிறிஸ்டியன் பேல் நடித்து வருகிறார்.

இந்நிலையில் 'தோர்: லவ் அண்ட் தண்டர்' படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் ‘கிளாடியேட்டர்’ புகழ் ரஸ்ஸல் க்ரோ ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இத்தகவலை ரஸ்ஸல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். ஆனால் அவருடைய கதாபாத்திரம் குறித்த எந்தத் தகவலையும் அவர் வெளியிடவில்லை.

எனினும் அவரது தோற்றத்தை வைத்து தோரின் தந்தை ஓடின் கதாபாத்திரத்தில் நடிக்க ரஸ்ஸல் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

சினிமா

4 hours ago

விளையாட்டு

5 hours ago

வணிகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

க்ரைம்

7 hours ago

சுற்றுச்சூழல்

7 hours ago

க்ரைம்

7 hours ago

இந்தியா

7 hours ago

சினிமா

8 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

மேலும்