மறைந்த சாட்விக் போஸ்மேனுக்கு கோல்டன் குளோப் விருது: ரூஸோ சகோதரர்கள் நெகிழ்ச்சி

By செய்திப்பிரிவு

மறைந்த நடிகர் சாட்விக் போஸ்மேனுக்கு கோல்டன் குளோப் விருது வழங்கப்பட்டது குறித்து ரூஸோ சகோதரர்கள் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளனர்.

மார்வெல் நிறுவனத்தின் புகழ்பெற்ற ‘ப்ளாக் பேந்தர்’ கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமானவர் சாட்விக் போஸ்மேன். 2016-ம் ஆண்டு வெளியான ‘கேப்டன் அமெரிக்கா: சிவில் வார்’ படத்தில் ப்ளாக் பேந்தராக முதன்முதலில் தலைகாட்டினார் போஸ்மேன்.

2017-ம் ஆண்டு சாட்விக் போஸ்மேனை வைத்து ‘ப்ளாக் பேந்தர்’ கதாபாத்திரத்துக்காகவே ஒரு முழு நீளப் படத்தைத் தயாரித்தது மார்வெல் நிறுவனம். படமும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதன் மூலம் உலகம் முழுவதுமுள்ள மார்வெல் ரசிகர்களின் மனதில் ப்ளாக் பேந்தராகவே பதிந்தார் போஸ்மேன்.

இந்தச் சூழலில் 2016-ம் ஆண்டு போஸ்மேனுக்கு பெருங்குடல் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதற்காக கடந்த நான்கு ஆண்டுகளாகச் சிகிச்சை மேற்கொண்டு வந்தார் போஸ்மேன். ஆனால், தனக்குப் புற்றுநோய் இருப்பது குறித்து வெளி உலகத்துக்கு அவர் அறிவிக்கவில்லை. சிகிச்சையின் நடுவே திரைப்படங்களிலும் நடித்து வந்தார்.

சிகிச்சை பலனின்றி சாட்விக் போஸ்மேன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 28-ம் தேதி காலமானார். அவரது மறைவு ஹாலிவுட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பல்வேறு முன்னணி நடிகர்கள், தயாரிப்பு நிறுவனங்கள் இரங்கல் தெரிவித்தார்கள்.

இந்நிலையில் 2020ஆம் ஆண்டு நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியான ‘ப்ளாக் பாட்டம்’ என்ற படத்தில் நடித்ததற்காக சாட்விக் போஸ்மேனுக்கு சிறந்த நடிகருக்கான கோல்டன் குளோப் விருது வழங்கப்பட்டது. இந்தப் பிரிவில் இறந்த பின்பு கோல்டன் குளோப் விருது வாங்கும் இரண்டாவது நபர் சாட்விக் போஸ்மேன். இதற்கு முன்பு 1977ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய நடிகரான பீட்டர் ஃபின்ச் என்பவருக்குச் சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது.

இதுகுறித்து அவெஞ்சர்ஸ் இயக்குநர்களான ரூஸோ பிரதர்ஸ் தங்கள் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். அதில், ''சாட்விக், உங்கள் ஆளுமை என்றென்றும் நிலைத்திருக்கக் கூடியது'' என்று குறிப்பிட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

9 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்