ஜூலை 10 ஆம் தேதி ஆன்லைனில் வெளியாகிறது டாம் ஹாங்ஸின் ‘க்ரேஹவுண்ட்’ 

By பிடிஐ

டாம் ஹாங்ஸ் நடித்துள்ள ‘க்ரேஹவுண்ட்’ திரைப்படம் ஜூலை 10 அன்று ஆப்பிள் டிவி+ தளத்தில் வெளியாகும் என்று சோனி நிறுவனம் அறிவித்துள்ளது.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக உலகம் முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டு, சினிமா படப்பிடிப்புகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

ஏற்கெனவே எடுத்து முடிக்கப்பட்ட படங்களின் வெளியீடுகளும் கூட அடுத்த ஆண்டுக்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. இன்னும் சில தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் படங்களை நேரடியாக ஆன்லைன் தளங்களில் வெளியிட்டு வருகின்றன.

அந்த வகையில் டாம் ஹாங்ஸ் நடிப்பில் இரண்டாம் உலகப் போரை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள ‘க்ரேஹவுண்ட்’ திரைப்படம் கடந்த ஆண்டு படப்பிடிப்பு முடிக்கப்பட்டு வரும் ஜூன் மாதம் 12 ஆம் தேதி வெளியாகும்படி திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கரோனா அச்சுறுத்தல் காரணமாக இப்படத்தை ஆப்பிள் டிவி+ ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளத்தில் நேரடியாக வெளியாகும் என சோனி நிறுவனம் அறிவித்திருந்தது.

இதுவரை இப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது இப்படம் ஆப்பிள் டிவி+ ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளத்தில் ஜூலை 10 அன்று வெளியாகும் என்று சோனி நிறுவனம் அறிவித்துள்ளது.

1955 ஆம் ஆண்டு சி.எஸ். ஃபாஸ்டர் என்பவர் எழுதிய ‘குட் ஷெப்பர்ட்’ என்ற நாவலை அடிப்படையாகக் கொண்ட இப்படத்துக்கு டாம் ஹாங்ஸ் திரைக்கதை எழுத, ஆரோன் ஷ்னீடர் இயக்கியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 mins ago

இந்தியா

14 mins ago

சினிமா

15 mins ago

இந்தியா

1 hour ago

வணிகம்

8 hours ago

சுற்றுச்சூழல்

1 hour ago

சுற்றுலா

1 hour ago

கல்வி

1 hour ago

தமிழகம்

2 hours ago

சுற்றுலா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்