‘டெனெட்’ திரைப்படம் ரிலீஸுக்குத் தயார்: கிறிஸ்டோபர் நோலன் தகவல்

By ஐஏஎன்எஸ்

கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘டெனெட்’. கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான ‘டன்கிர்க்’ படத்திற்குப் பிறகு நோலன் இயக்கிய படம் இது. இப்படத்தில் ஜான் டேவிட் வாஷிங்டன், ராபர்ட் பேட்டின்சன், மைக்கேல் கெய்ன், டிம்பிள் கபாடியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் இரண்டு ட்ரெய்லர்கள் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றன. இப்படத்தை வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

வரும் ஜூலை மாதம் 17ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட ‘டெனெட்’ திரைப்படம் ஊரடங்கால ஒத்திவைக்கப்பட்டுள்ளது. படத்தின் வெளியீட்டுத் தேதி எப்போதும் வெளியாகும் என்று அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழுவினர் இதுவரை வெளியிடவில்லை.

இந்நிலையில் ‘டெனெட்’ திரைப்படம் வெளியீட்டுக்குத் தயாராக இருப்பதாக இயக்குநர் நோலன் தெரிவித்துள்ளார்.

வார இதழ் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில் இதை அவர் உறுதி செய்துள்ளார்.

இதுகுறித்து நோலன் கூறுகையில், '' ‘டெனெட்’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் முடியும் நிலையில் உள்ளன. திரையரங்குகள் திறக்கப்படும் வேளையில் படம் வெளியாகும். இப்போதைக்கு என்னால் இவ்வளவுதான் சொல்லமுடியும்'' என்றார்.

உலகம் முழுவதும் 80 சதவீத திரையரங்குகள் திறக்கப்பட்டால் மட்டுமே ‘டெனெட்’ படம் வெளியாகும் என்று வார்னர் ப்ரதர்ஸ் நிறுவனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

உலகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

7 hours ago

சினிமா

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்