‘தி எடர்னல்ஸ்’ படப்பிடிப்பு நிறைவு 

By செய்திப்பிரிவு

‘தி எடர்னல்ஸ்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக நடிகை கெம்மா சான் உறுதிப்படுத்தியுள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸின் 22-வது படமாக உலகமெங்கும் வெளியாகி பெரும் வசூல் சாதனையை நிகழ்த்தியது ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’. அதற்குப் பிறகு வெளியான ‘ஸ்பைடர்மேன் ஃபார் ஃப்ரம் ஹோம்’ படத்தோடு மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸின் 3 ஆம் பாகம் முடிவுக்கு வந்தது.

மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸின் நான்காம் பாகத்துக்கான படங்களின் பட்டியலை சில மாதங்களுக்கு முன்பு மார்வெல் நிறுவனம் வெளியிட்டிருந்தது. அதில் 'பிளாக் விடோ’, 'தி எடர்னல்ஸ்’, 'டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் 2’, 'தோர்: லவ் அன்ட் தண்டர்’ ஆகிய படங்கள் இடம் பெற்றுள்ளன.

இதில் ‘தி எடர்னல்ஸ்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக நடிகை கெம்மா சான் உறுதிப்படுத்தியுள்ளார்.

இது குறித்து அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ''நிறைவடைந்தது. சரியான நேரத்தில் படப்பிடிப்பு முடிய உதவிய என்னுடைய சக நடிகர்களுக்கும், நமது திறமைவாய்ந்த படக்குழுவினருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கெம்மா சென் குறிப்பிட்டுள்ளார்.

ச்லோ ஸாவ் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் ஏஞ்சலினா ஜூலி, சல்மா ஹயக், கெம்மா சான், கிட் ஹாரிங்டன் உள்ளிட்டோர் நடித்துள்ளர்.

பழங்கால வேற்றுகிரகவாசிகள் ஆயிரம் ஆண்டுகளாக பூமியில் ரகசியமாக வாழ்ந்து வருகின்றனர். ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ படத்தைத் தொடர்ந்து நடக்கும் ஒரு எதிர்பாராத சம்பவத்துக்குப் பிறகு மனிதகுலத்தின் எதிரியான ‘தி டீவியன்ட்ஸ்’ எனப்படும் சக்திகளுக்கு எதிராக அவர்கள் ஒன்றிணைவதே ‘தி எடர்னல்ஸ்’ படத்தின் கதை.

‘தி எடர்னல்ஸ்’ படம் இந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

37 mins ago

விளையாட்டு

59 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

2 hours ago

ஆன்மிகம்

1 hour ago

கருத்துப் பேழை

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

உலகம்

2 hours ago

மேலும்