வசனமின்றி அசத்தும் தி வாக் ட்ரைய்லர்

By ஆலன் ஸ்மித்தீ

'ஃபாரஸ்ட் கம்ப்', 'காஸ்ட் அவே', 'பேக் டு தி ஃபியூச்சர்' போன்ற படங்களை இயக்கிய ஹாலிவுட் இயக்குநர் ராபர்ட் ஸெமிக்ஸ் இயக்கத்தில் அடுத்து வெளியாகவுள்ள திரைப்படம் 'தி வாக்'.

உயரமான இடங்களுக்கு நடுவில், கயிற்றில் நடந்து சாகசம் புரிபவர்கள் மேலை நாடுகளில் அதிகம். அப்படி 1974-ஆம் ஆண்டு, அமெரிக்காவின் ட்வின் டவர்களுக்கு நடுவே, கயிற்றில் நடந்து சாகசம் புரிந்த பிலிப் பெடிட் என்பவரின் வாழ்க்கையைப் பதிவு செய்யும் திரைப்படம்தான் 'தி வாக்'.

இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியிடப்பட்டு, ஆர்ப்பாட்டமில்லாமல் ஒரே நாளில் யூடியூபில் 2.38 லட்சம் முறை பார்க்கப்பட்டுள்ளது.

கீழிருந்து மேல், ட்வின் டவர் உச்சிக்கு வேகமாக கேமரா நகர, அதன் மொட்டை மாடிக்குள் நுழைகிறார் ஒருவர். நடந்து வந்து அந்தப் பக்கம் இருக்கும் ட்வின் டவரின் இரண்டாவது கட்டிடத்தைப் பார்க்கிறார். மெதுவாக சுவரில் ஏறி, கட்டிடத்தின் வெளியே நீண்டிருக்கும் கம்பி ஒன்றில் மெதுவாக நடந்து அதன் விளிம்பிற்கு வருகிறார். தலையக் குனிந்து 1000 அடிக்கும் கீழ் இருக்கும் சாலையைப் பார்த்து சற்றே தடுமாறுகிறார். பிறகு மெதுவாக தன்னை நிலைப்படுத்திக் கொண்டு ஒற்றைக் காலில் நின்று அந்த காற்றை ரசிக்கிறார்.

ஒரு வசனமும் இல்லாமல், வெறும் சப்தங்கள் மற்றும் இசையை மட்டுமே வைத்து தயாராகியுள்ள இந்த ட்ரெய்லர் பார்க்கும் ஒவ்வொருவரையும் புல்லரிக்க வைப்பது உறுதி. அந்த உயரத்தில், நாயகனோடு நாமும் நின்று அந்தக் காற்றை ரசிப்பது போன்ற உணர்வைத் தருகிறது. 3டி மற்றும் ஐமேக்ஸ் 3டியில் வெளியாகவுள்ள தி வாக், திரையரங்கில் ரசிகர்கள் அனைவரையும் மலைக்க வைக்க அடுத்த ஆண்டு அக்டோபரில் வெளியாகவுள்ளது. அதற்குள் தமிழகத்தில் ஒரு நல்ல ஐமேக்ஸ் திரையரங்கம் வந்துவிடாத என ஏங்கவும் வைக்கிறது தி வாக்.

இன்சப்ஷென், டார்க் நைட் ரைஸஸ் உள்ளிட்ட படங்களில் நடித்த ஜோசப் கார்டன் லெவிட் இத்திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். அவரோட பென் கிங்ஸ்லி, ஜேம்ஸ் பாட்ஜ் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். ஏற்கனவே தனது திரைப்படங்கள் மூலம் பல விருதுகளையும், உலகம் முழுவதும் எண்ணற்ற ரசிகர்களையும் கொண்டுள்ள இயக்குநர் ராபர்ட் ஸெமிக்ஸ், 62 வயதிலும் கலையின் மீது தனக்கிருக்கும் ஆளுமையை இந்த ட்ரெய்லரின் மூலம் நிரூபித்துள்ளார். ட்ரெய்லர் இணைப்பு கீழே.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

3 mins ago

தமிழகம்

22 mins ago

தமிழகம்

33 mins ago

இந்தியா

27 mins ago

தமிழகம்

44 mins ago

வாழ்வியல்

35 mins ago

இந்தியா

49 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

மேலும்