‘சபாஷ் மிது’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

By செய்திப்பிரிவு

டாப்ஸி நடிப்பில் உருவாகியுள்ள ‘சபாஷ் மிது’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள படம் ‘சபாஷ் மிது’. இப்படத்தில் மிதாலி ராஜ் பாத்திரத்தில் டாப்ஸி நடித்துள்ளார். வியாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது. இப்படத்தை முதலில் இயக்கி வந்தவர் ராகுல் டோலக்யா. தனிப்பட்ட காரணங்களால் அவர் இப்படத்திலிருந்து விலகவே ஸ்ரீஜித் முகர்ஜி இப்படத்தை இயக்கி முடித்தார்.

கடந்த ஏப்ரல் மாதம் மும்பையில் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு கரோனா அச்சுறுத்தலால் பாதியில் நிறுத்தப்பட்டது. அதன் பின்னால் கரோனா பரவல் குறையத் தொடங்கியதும் மீண்டும் படப்பிடிப்பைத் தொடங்கி ஒரே கட்டமாக முடித்தது படக்குழு.

இந்நிலையில் ‘சபாஷ் மிது’ படத்தின் வெளியீட்டுத் தேதியைப் படக்குழு அறிவித்துள்ளது. இப்படம் வரும் பிப்ரவரி 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. மிதாலி ராஜின் பிறந்த நாளான இன்று (டிச.3) இந்த அறிவிப்பை படக்குழு தம் சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

33 mins ago

தமிழகம்

29 mins ago

இந்தியா

53 mins ago

இந்தியா

40 mins ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

55 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

மேலும்