அஜய் தேவ்கன் இயக்கத்தில் அமிதாப் நடிக்கும் ‘ரன்வே 34’ - வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

By செய்திப்பிரிவு

அஜய் தேவ்கன் இயக்கத்தில் அமிதாப் பச்சன் நடிக்கும் ‘ரன்வே 34’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

பாலிவுட்டில் பிரபல நடிகராக இருப்பவர் அஜய் தேவ்கன். நடிப்பு தவிர்த்து இதுவரை ‘யூ மீ ஆர் ஹம்’ மற்றும் ‘ஷிவாய்’ உள்ளிட்ட இரண்டு படங்களை இயக்கியுள்ளார். தற்போது மூன்றாவதாக ஒரு படத்தை இயக்கி வருகிறார். இதில் அமிதாப் பச்சன், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள். ‘மேடே’ என்று தலைப்பிடப்பட்ட இப்படத்துக்கு தற்போது ‘ரன்வே 34’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இப்படத்தில் அஜய் தேவ்கனும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரும் இப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 29ஆம் தேதி வெளியாகவுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. இதற்கான பிரத்யேக போஸ்டர் ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

இப்படத்தை அஜய் தேவ்கன் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

25 mins ago

தமிழகம்

39 mins ago

தமிழகம்

52 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

1 hour ago

மேலும்