மகாராஷ்டிராவில் திரையரங்குகள் திறப்பு: 24 படங்களின் வெளியீட்டு தேதிகளை ஒரே நேரத்தில் அறிவித்த பாலிவுட்

By செய்திப்பிரிவு

மகாராஷ்டிரா மாநிலத்தில் திரையரங்குகள் திறக்கப்படுவதைத் தொடர்ந்து இந்த வருடமும், அடுத்த வருடமும் வெளியாகவிருக்கும் முக்கிய பாலிவுட் திரைப்படங்களின் வெளியீட்டுத் தேதிகளை அந்தந்த தயாரிப்புத் தரப்புகள் ஒரே நேரத்தில் அறிவித்துள்ளன.

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த கடந்த வருடம் மார்ச் மாதம் முதல் இந்தியாவில், அந்தந்த மாநிலங்களின் நிலைக்கு ஏற்ப, தளர்வுகளுடன் பொதுமுடக்கம் தொடர்ந்து அமலில் இருக்கிறது. குறிப்பாக மகாராஷ்டிராவில் திரையரங்குகள் சமீப காலம் வரை திறக்கப்படவில்லை. இதனால் பாலிவுட் தயாரிப்பாளர்கள் பலர் தங்கள் படங்களை வெளியிடாமல் ஒரு வருடத்துக்கும் மேலாகக் காத்திருக்கின்றனர்.

மகாராஷ்டிராவில் மட்டுமே 1000-க்கும் அதிகமான திரையரங்குகள் உள்ளன. பாலிவுட் வசூலில் 30 சதவிதம், இந்த மாநிலத்திலிருந்து மட்டுமே வருவதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து திரைத்துறையைச் சேர்ந்த பலரும், மகாராஷ்டிராவில் திரையரங்குகளைத் திறந்து துறையைச் சார்ந்தவர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்தனர்.

தற்போது இந்தியாவில் கரோனா தொற்று எண்ணிக்கைக் குறைந்து வரும் நிலையில், கடந்த சனிக்கிழமை அன்று, பாலிவுட்டின் முன்னணித் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் உள்ளிட்டோர் மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவைச் சந்தித்து திரையரங்குகள் திறப்பு தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதனைத் தொடர்ந்து அக்டோபர் 22-ம் தேதி முதல் மகாராஷ்டிராவில் திரையரங்குகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதனால் தற்போது இந்த வருடமும், அடுத்த வருடமும் வெளியாகவுள்ள முக்கிய பாலிவுட் திரைப்படங்களின் அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.

2021 வெளியாகவிருக்கும் படங்கள்

பவாய் - 1 அக்டோபர்
சூர்யவன்ஷி - தீபாவளி
நோ மீன்ஸ் நோ - தீபாவளி
பன்டீ அவுர் பப்ளி 2 - 19 நவம்பர்
சத்யமேவ ஜெயதே 2 - 26 நவம்பர்
தடப் - 3 டிசம்பர்
சந்திகர் கரே ஆஷிகீ - 10 டிசம்பர்
83 தி ஃபிலிம் - கிறிஸ்துமஸ்
புஷ்பா 1 - கிறிஸ்துமஸ்
ஜெர்சி - 31 டிசம்பர்

2022 வெளியீடுகள்

ராதே ஷ்யாம் - 14 ஜனவரி
ப்ரித்விராஜ் - 21 ஜனவரி
ஃபைட்டர் - 26 ஜனவரி
லால் சிங் சட்டா - காதலர் தினம்
ஜெய்ஷ்பாய் ஜொர்தார் - 25 பிப்ரவரி
பச்சன் பாண்டே - 4 மார்ச்
ஷம்ஷேரா - 12 மார்ச்
பூல் புலைய்யா 2 - 25 மார்ச்
கேஜிஎஃப் 2 - 14 ஏப்ரல்
மே டே - 29 ஏப்ரல்
ஹீரோபந்தி 2 - 6 மே
ரக்‌ஷாபந்தன் - 11 ஆகஸ்ட்
விக்ரம் வேதா ரீமேக் - 30 செப்டம்பர்
ராம் சேது - தீபாவளி 2022
கணபத் - 23 டிசம்பர்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

7 mins ago

சினிமா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

வணிகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

க்ரைம்

4 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

க்ரைம்

5 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

6 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

மேலும்