‘ரங் தே பசந்தி’ வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவு- ‘ஒட்டுமொத்த தேசத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்திய படம்’ - இயக்குநர் பகிர்வு 

By ஐஏஎன்எஸ்

‘ரங் தே பசந்தி’ வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் அது குறித்த நினைவுகளை இயக்குநர் ராகேஷ் ஓம்பிரகாஷ் பகிர்ந்துள்ளார்.

ஆமிர் கான், மாதவன், சித்தார்த் நடிப்பில் வெளியான படம் ‘ரங் தே பசந்தி’. 2006ஆம் ஆண்டு வெளியான இப்படத்தை ராகேஷ் ஓம்பிரகாஷ் இயக்கியிருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்களும் அனைத்தும் ஹிட்டடித்தன. பிரபலமான திரைப்படத்துக்கான தேசிய விருதையும் இப்படம் பெற்றது. மேலும் இந்தியா சார்பில் ஆஸ்கர் விருது போட்டிக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

நேற்றோடு இப்படம் வெளியாகி 15 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இப்படம் குறித்த நினைவுகளை இயக்குநர் ராகேஷ் ஓம்பிரகாஷ் பகிர்ந்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:

‘ரங் தே பசந்தி’ ஒரு படம் எனபதையும் தாண்டி வளர்ந்துள்ளது. அது வெளியான சமயத்தில் கூட சினிமா விரும்பிகளையும் தாண்டி ஒட்டுமொத்த தேசத்தின் மனசாட்சிகளின் மீது அது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இப்படம் என்றென்றும் பசுமையான நினைவுகளை கொண்டுள்ளது. அதை எப்படி விவரிப்பது என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் நம் படம் எப்போது பொருத்தமான ஒன்றாக இருப்பதை காண்பது மகிழ்ச்சியான ஒரு அனுபவம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 mins ago

வணிகம்

55 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

உலகம்

1 hour ago

வணிகம்

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்