கரோனோ வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதியில் தாராளம் காட்டிய அக்‌ஷய் குமார்

By செய்திப்பிரிவு

பிரபலங்கள் அளித்துள்ள நன்கொடை குறித்து இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஹியூமன் பிராண்ட்ஸ் (ஐஐஎச்பி) நிறுவனம்ஆய்வு நடத்தியுள்ளது. பிரபலங்களின் நிலை மற்றும் நன்கொடைதொகை எவ்வளவு மற்றும் யாருக்கு நன்கொடை வழங்கப்பட்டது என்பதற்கான வெளிப்படைத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் குறியீடுகளை கணக்கிட்டு புள்ளிகளை வழங்கியுள்ளது இந்நிறுவனம்.

இதில் பாலிவுட் நடிகர் அக் ஷய் குமார் 10.0 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ளார். பிரபலஹார்ட்ஃபுல்னெஸ் இன்டெக்ஸில் (சிஎச்ஐ) அக்‌ஷய் குமார் முதலிடம் பிடித்தார். அக் ஷய்குமார், பிரதமர் பொது நிவாரணநிதிக்கு ரூ.25 கோடி வழங்கி உள்ளார். டி-சீரிஸ் உரிமையாளர் பூஷன் குமார் 2-வது இடத்தைப்பிடித்தார். அவர் பிரதமர் நிவாரணநிதிக்கு ரூ.11 கோடியும், மகாராஷ்டிர முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.1 கோடியும் வழங்கி உள்ளார்.

பாலிவுட் நட்சத்திரம் கார்த்திக்ஆரியன் மற்றும் வடிவமைப்பாளர் சபியாசாச்சி ஆகியோர் தலா ரூ.1 கோடி நன்கொடை இருந்தனர். இதன் மூலம் அவர்கள் 8.0 புள்ளிகள் பெற்று 3-வதுஇடத்தைப் பிடித்தனர். இதில் ஆரியன் பொது சேவை வீடியோவைஉருவாக்கிய முதல் பிரபலங்களில் ஒருவராக மட்டுமல்லாமல்,மிகப்பெரிய தொகையை நன்கொடையாக வழங்கியதற்காக பாராட்டுகளைப் பெற்றார்.

தென்னிந்திய நட்சத்திரங்களில் பிரபாஸ், விக்கி கவுசல் மற்றும் பிசிசிஐ தலைவர் சவுரவ்கங்குலி ஆகியோர் தங்கள் பங்களிப்புக்காக 7.5 புள்ளிகளை பெற்று 4-வது இடத்தைப் பிடித்தனர். ரூ.1 லட்சம் நன்கொடை அளித்த கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி மற்றும் ரூ.10 லட்சம்வழங்கிய பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து ஆகியோர் தங்களது அந்தஸ்துடன் ஒப்பிடுகையில் பூஜ்ஜியம் அல்லது பூஜ்ஜியத்துக்கு அருகில் புள்ளிகளைப் பெற்று உள்ளனர். விராட் கோலிஅவரது மனைவி அனுஷ்கா ஷர்மா மற்றும் நடிகை தீபிகா படுகோன் அவரது கணவர் ரன்வீர் சிங் ஆகியோரும் குறைந்த புள்ளிகளைப் பெற்றுள்ளனர். ஏனெனில் இவர்கள் நிவாரண நிதிக்கு வழங்கிய தொகையை குறிப்பிடவில்லை.

தென்மாநில நட்சத்திரங்கள் பவன் கல்யாண், அல்லு அர்ஜுன், சிரஞ்சீவி, மகேஷ் பாபு ஆகியோர் பெரிய தொகை நன்கொடைவழங்கியவர்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். கிரிக்கெட் வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோருக்கும் நல்ல புள்ளிகள் கிடைத்துள்ளன. நகைச்சுவைநடிகர் கபில் சர்மா இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே தொலைக்காட்சி பிரபலம் ஆவார். ஷாருக்கான் முதல் தரவரிசையில் இடம்பெறவில்லை. அவர் 4.0 புள்ளிகள் பெற்றுள்ளார். அவர் பல தொண்டு நிறுவனங்கள் மற்றும் நிவாரண நிதிகளை ஆதரித்த போதிலும், அவர்வழங்கிய ஒட்டுமொத்த தொகை குறித்து எந்த தெளிவும் இல்லை.

அமிதாப் பச்சன் 2.0 புள்ளிகள்மட்டுமே பெற்றார். அவர் நன்கொடைத் தொகையை ஒரு தனிப்பட்ட திறனில் அறிவிக்கவில்லை. குடும்ப உறுப்பினர்களான ஜெயா பச்சன், ஐஸ்வர்யா ராய் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன் ஆகியோர் நிவாரண நிதி பங்களிப்பு குறித்துபகிரங்கமாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. நடிகர் அமீர்கான் எந்த நிதி அறிவிப்பும் வெளியிடாததால் அவருக்கு எந்த மதிப்பெண்ணும் கிடைக்கவில்லை. அதே வேளையில் திரையுலகில் தினசரி 25,000 தொழிலாளர்களுக்கு உதவி செய்வதாக சல்மான் கான் உறுதி அளித்த போதிலும், அவர் செலவழிக்கும் உறுதியான தொகை குறித்து எந்த தெளிவும் இல்லை.

ஆலியா பட், சாரா அலி கான்,கிருதி சனோன், கியாரா அத்வானி, ரகுல் ப்ரீத், டாப்ஸி பானு மற்றும் பூமி பெட்னேகர் உள்ளிட்ட இளம் நடிகைகள் 1.0 புள்ளிகள் பெற்றுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

11 mins ago

சினிமா

29 mins ago

வாழ்வியல்

11 mins ago

தமிழகம்

47 mins ago

க்ரைம்

54 mins ago

வணிகம்

58 mins ago

சினிமா

55 mins ago

கருத்துப் பேழை

2 hours ago

உலகம்

1 hour ago

வணிகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்