ஸ்பானிஷ் வெப் சீரிஸை திரைப்படமாக்கும் ஷாரூக் கான்: உரிமையை வாங்கினார்

By செய்திப்பிரிவு

ஸ்பானிஷ் மொழியில் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியான 'மனி ஹைஸ்ட்' என்கிற பிரபல வெப் சீரிஸை பாலிவுட் திரைப்படமாக்குகிறார் நடிகர் ஷாரூக் கான்.

'தி ஃப்ரொஃபஸர்' என்கிற கதாபாத்திரத்தை மையமாக வைத்து நடக்கும் கதை 'மனி ஹைஸ்ட்'. இதுவரை வரலாற்றில் இல்லாத மிகப்பெரிய கொள்ளைச் சம்பவத்தை நடத்த வேண்டும் என்று திட்டமிடுகிறார் 'தி ஃப்ரொஃபஸர்'. அவருக்கு உதவி செய்ய 8 நபர்களைத் தேர்ந்தெடுக்கிறார். ஸ்பெய்ன் நாட்டில் பணம் அச்சடிக்கும் இடத்தையே இவர்கள் குறி வைக்கிறார்கள். இவர்கள் திட்டம் என்ன ஆனது என்பதே கதை.

இந்தத் தொடரின் முதல் மூன்று சீஸன் மாபெரும் வரவேற்பைப் பெற்று தற்போது நான்காவது சீஸன் தயாரிப்பில் உள்ளது. 

'ஜீரோ' படத்தின் தோல்விக்குப் பிறகு ஷாரூக் கான் சரியான கதையைத் தேடி வந்தார். அப்போதுதான் 'மனி ஹைஸ்ட்' பற்றி தெரியவந்துள்ளது. இந்தத் தொடரின் உரிமையை ஷாரூக் கானின் ரெட் சில்லீஸ் நிறுவனம் வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தை தயாரிப்பதோடு, 'தி ஃப்ரொஃபஸர்' கதாபாத்திரத்தில் ஷாரூக் நடிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

வெப் சீரிஸை எப்படி திரைப்படமாக மாற்றவுள்ளார்கள் என்று இப்போதிலிருந்து சினிமா ஆர்வலர்கள் எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

தமிழகம்

14 mins ago

வாழ்வியல்

5 mins ago

இந்தியா

19 mins ago

தமிழகம்

40 mins ago

சினிமா

36 mins ago

தமிழகம்

58 mins ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்