ராஜா ரசிகர்கள் கவனத்துக்கு... விரைவில் How to Name it 2: இளையராஜா அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: "How to Name it" இசை ஆல்பத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகவுள்ளதாக இசயமைப்பாளர் இளையராஜா அறிவித்துள்ளார்.

இதுகுறித்து பேஸ்புக்கில் இளையராஜா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியது: திரைப்படங்களில் எல்லாம், பாகம் 1, பாகம் 2 , பாகம் 3 என்று வருகிறது அல்லவா. சூப்பர் மேன் 1, சூப்பர் மேன் 2, சூப்பர்மேன் 3-னு போகுது, பேட்மேன் 1, 2,3, 4-னு வரிசையாக போகுது. இதுபோல மியூசிக்கில் ஏன் வரக்கூடாதுனு ஒரு யோசனை வந்தது. அதனால், How to Name it -2 சீக்கிரமே வரப்போகிறது" என்று அவர் கூறியுள்ளார்.

How to Name it: ஆயிரம் திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள இளையராஜாவின் தனி இசை ஆல்பங்களில் How to Name it இசை ஆல்பமும் ஒன்றாகும். கடந்த 1986-ம் ஆண்டு வெளியான இந்த இசை ஆல்பம் இன்றுவரை பல்வேறு இசை கலைஞர்கள், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக பல்வேறு தனியார் நிகழ்ச்சிகளிலும், பள்ளி, கல்லூரிகளில் நடைபெறும் Mime என்றழைக்கப்படும் நாடக வடிவத்துக்கு பின்னணி இசையாக இந்த ஆல்பத்தின் இசை பரவலாக பயன்படுத்துகின்றனர்.

இந்த ஆல்பம் முழுவதும் இந்திய-மேற்கத்திய இசைகளை உள்ளடக்கிய இசை கோர்வையாகும். பாடல் வரிகள் எதுவும் இல்லாமல் வயலின், புல்லாங்குழல் உள்ளிட்ட பல்வேறு இசைக்கருவிகளை மட்டும் வைத்து இசைக்கப்பட்டிருக்கும். இதில், How to Name it, Mad Mod Mood Fugue, You cannot Be Free, Study for Violin, Do Anything உள்ளிட்ட 10 பாடல்கள் (instrumental) இடம்பெற்றிருக்கும்.

வீடு திரைப்படத்தில்.... How to Name it இசை ஆல்பத்தின் பத்தாவது பாடலான Do Anything-ன் இசை, இயக்குநர் பாலுமகேந்திரா இயக்கிய வீடு திரைப்படத்தில் இசையமைப்பாளர் இளையராஜா பயன்படுத்தியிருப்பார். பூச்சு வேலை முடிக்காமல், கட்டி முடிக்கப்பட்டிருக்கும், வீடு திரைப்படத்தில் காட்டப்படும் அந்த வீட்டின் படிக்கட்டில், சொக்கலிங்க பாகவதர் தனது காலை வைக்கும்போதும் தொடங்கும் How to Name it ஆல்பத்தின் இசை அந்த காட்சிக்கு அத்தனை உயிர் கொடுத்திருக்கும்.

இந்நிலையில் இசையமைப்பாளர் இளையராஜாவின் How to Name it 2 பாகம் வெளியாகவுள்ளதாக அவரே அறிவித்திருப்பது இசை ரசிகர்கள் இடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

26 mins ago

இந்தியா

37 mins ago

சினிமா

38 mins ago

இந்தியா

1 hour ago

வணிகம்

9 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

சுற்றுலா

2 hours ago

கல்வி

1 hour ago

தமிழகம்

2 hours ago

சுற்றுலா

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்