சென்னை பட விழா | அண்ணா | டிசம்.18 | படக்குறிப்புகள்

By செய்திப்பிரிவு

காலை 9.30 மணி | ARAB BLUES / UN DIVAN A TUNIS | DIR: MANELE LABIDI LABBE | FRANCE | 2019 | 88'

மனோதத்துவ நிபுணரான செல்மா 10 ஆண்டு பாரீஸ் வாழ்க்கைக்குப் பிறகு சொந்த நாடு திரும்புகிறார். அங்கு தனது மனோதத்துவப் பயிற்சி மையத்தை குறுக்கு வழியில் தொடங்க எண்ணுகிறார். இங்கிருந்துதான் அரபு ப்ளூஸ் படம் தொடங்குகிறது. அங்குள்ள உள்ளூர் கலாச்சாரத்திற்கும் செல்மாவின் மனோதத்துவ நிபுணத்துவ சிகிச்சைக்கும் இடையே பெரிய இடைவேளை நீடிக்கிறது. இதனால் செல்மா எதிர்பாராத சிக்கல்களை சந்திக்கிறார். இதற்கிடையில் செல்மாவை போலீஸ் அதிகாரி ஒருவர் தொடர்ந்து கண்காணிக்கிறார். தனக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்களை எல்லாம் செல்மா கடக்கிறரா என்பதை நகைச்சுவை கலந்த திரைக்கதையில் கூறி இருக்கிறது அரப் புளூஸ்.

2 nominations

பகல் 12.00 மணி | F20 (F20)| DIR: ARSEN A. OSTOJIC | CROATIA | 2018 | 90'

மார்டினா, பிட்ஸா டெலிவரி வேலை செய்யும் இளம் பெண். எப்போதும் வீடியோகேம் விளையாடிக்கொண்டிருக்கும், பிட்ஸா சாப்பிடும் ஃபிலிப் என்பவனை காதலிக்கிறாள். பார்டி பீச்சுக்கு செல்ல தனது அப்பாவின் பணத்தை திருடவேண்டும் என்று ஃபிலிப்பை சம்மதிக்க வைக்கிறாள். ஆனால் அதன் பிறகு எல்லாம் ரத்தம் நிறைந்த கெட்ட கனவாக மாறுகிறது.

பிற்பகல் 2.30 மணி | TLAMESS / TLAMESS | DIR: ALA EDDINE SLIM | FRANCE | 2019 | 120'

துனிஷிய பாலைவனத்தில் உள்ள முகாமில் பணியாற்றும் ஓர் இளம் ராணுவ வீரர். தனது தாய் மரணமடைந்த செய்தி கேட்டு ஒருவார விடுமுறையில் வீட்டுக்குச் செல்கிறார். ஆனால் திரும்பவும் முகாமுக்கு வரவில்லை. அவர் என்ன ஆனார்? என்ன செய்கிறார்? என்பதே படம். தப்பித்துச் செல்லும் அந்த ராணுவ வீரர் காடு, மலை, பாலைவனம் என பயணம் செய்கிறார். அவர் பணிக்கு திரும்பாததால் அவரை தேடி ராணுவ அதிகாரிகள் வருகின்றனர். தப்பிச் சென்ற செய்தியால் அவர்கள் பின் தொடர அந்த வீரர் ஓடுகிறார். அவரது அந்த பயணத்தை விவரிக்கிறது படம். இந்த பயணம் சிறப்பான முறையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

1 win & 3 nominations

மாலை 4.30 மணி | JUST 6.5 / METRI SHESH VA NIM | DIR: SAEED ROUSTAYI | IRAN | 2019 | 131'

போதைமருந்து கேங்ஸ்டர் நாசர் கக்ஸாத்தைப் பிடிக்க முயலும் போலீஸ் தேடுதல் பணியில் ஈடுபடுகின்றனர். இறுதியாக போராடி அவனை நெருங்கி விடுகின்றனர். எனினும் அவன் தனது குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக தப்பிக்க முயற்சி செய்கிறான். அவனது முன்னாள் வருங்கால மனைவி, அவன் இருப்பிடத்தைக் காட்டிக் கொடுத்து விடுகிறார். போலீஸிடம் சிக்கிய நஸார் காக்ஸாத் சிறையிலிருந்து வெளியேறுவதற்கும் மரண தண்டனையைத் தவிர்க்கவும் முயற்சி செய்கிறான்.

மாலை 7.15 மணி | AMARE AMARO / AMARE AMARO | DIR: JULIEN PAOLINI | FRANCE | 2018 | 89'

கேடானோ சராசரியான அமைதியான இளைஞன். தனது தந்தையுடன் வசித்து வரும் கேடானோ தனது குடும்ப பேக்கரியை தனியாக கவனித்து வருகிறார். அவருடைய பேக்கரி பொருட்கள் அவர் வசிக்கும் கிராம மக்களால் அதிகம் விரும்பி வாங்கப்பட்டாலும், பிரெஞ்சு தந்தைக்கும் இத்தாலி தாய்க்கும் பிறந்த அவரை கிராமம் ஏற்றுக் கொள்ளவில்லை. இந்த நிலையில் கேடானோவின் சகோதரர் குற்ற சம்பவத்தில் இறக்க அவரது இறுதிச் சடங்கை கிராமத்தில் நடத்த கிராமம் தடைவிதிக்கிறது. கிராமத்தின் எதிர்ப்பை மீறி கேடானோ தனது சகோதரை தனது தாயின் சமாதியின் அருகில் புதைக்கிறாரா என்பதை த்ரில்லிங்காக கூறுவதே அமரே அமரோ.

1 win & 25 nominations

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 min ago

வலைஞர் பக்கம்

5 mins ago

சினிமா

10 mins ago

சினிமா

15 mins ago

இந்தியா

23 mins ago

க்ரைம்

20 mins ago

இந்தியா

26 mins ago

தமிழகம்

48 mins ago

இந்தியா

55 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்