சென்னை பட விழா | கேஸினோ  | டிசம்.16 | படக்குறிப்புகள்

By செய்திப்பிரிவு

காலை 9.45 மணி | STRAY / STRAY | DIR: DUSTIN FENELEY | NEW ZEALAND | 2018 | 104'

அறிமுகம் இல்லாத ஒரு ஆண், பெண்ணுக்கு இடையே நடக்கும் சம்பாஷனைகள், நட்பு, புரிதல் பற்றிய திரைப்படம். மிகவும் குளிர்ந்த, பனிபடர்ந்த இடத்தில் அந்த ஆணும், பெண்ணும் சந்திக்க நேரிடுகிறது. இருவரும் தங்களின் கடந்த காலத்தை பற்றி பகிர்கிறார்கள். அந்த ஆண் தனது காதலியை கொலை செய்தவனை, கொலை செய்யும் முயற்சியில் தோல்வி அடைந்து போலீஸாரால் கைது ெசய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தவர். அந்த பெண் மனரீதியாக பாதிக்கப்பட்டு உளவியல் சிகிச்சை பெற்று திரும்பியவர். இருவரும் ஒரு மலைப்பகுதியைக் கடக்கிறார்கள். அப்போது இருவருக்கும் இடையே உருவாகும் உறவு குறித்த கதைதான் “ஸ்ட்ரே”

பகல் 12.15 மணி | SWEETHEARTS / SWEETHEARTS | DIR: KAROLINE HERFURTH | GERMANY | 2019 | 107'

தவறுதலில் சென்று முடிந்த வைரக் கடத்தல் சம்பவத்தாலும், விதியின் கட்டாயத்தினாலும் ஒன்றாக இணைய கட்டாயப்படுத்தப்படுகிறார்கள் மெலும், பிரானியும், கடத்தல்காரியான மெலும், அவரால் கடத்தப்பட்ட பிரானியும் ஒருவரை ஒருவர் எதிர்த்துக் கொண்டு ஒன்றாக பயணிக்கிறார்கள். இந்த நிலையில் இருவருக்கு ஏற்படும் பிரச்சனை ஒன்றிலிருந்து தப்பிப்பதற்கு ஒன்றாக பணி செய்வதை தவிர வேறு வாய்ப்பு இல்லாமல் போகிறது. இரு பெண்களின் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்ட இப்படத்தை நகைச்சுவை கலந்த பாணியில் இயக்கி இருக்கிறார் இயக்குனர் கரோலின் ஹெஃபர்த்.

பகல் 2.45 | ZERO FLOOR / PILOT | DIR: EBRAHIM EBRAHIMAIAN | IRAN | 2019 | 90'

வாஹித் தனது நான்கு வயது மகன் சோஹீலிக்கு நடைபெற உள்ள அறுவை சிகிச்சையை நிறுத்த தெஹ்ரானுக்கு வருகிறார், ஆனால் அவர் அறுவை சிகிச்சையின் போது உயிரிழந்த மகனைத்தான் காண முடிகிறது.. வாஹித் தனது முன்னாள் மனைவி பாஹிமே தனது சுயநலத்திற்காக எடுத்த முடிவுதான் சோஹீலின் மரணத்திற்கு காரணம் என குற்றம் சாட்டுகிறார், வாஹித் மற்றும் பாஹிமே இடையேயான உறவில் ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்குகிறது சோஹீலின் மரணம். அவர்கள் சொல்லாத வார்த்தைகள் அனைத்தும். அங்கு புதிய அர்த்தங்களை தருகிறது.

மாலை 4.45 மணி | IRINA | IRINA | DIR: NADEJDA | BULGARIA / 2018 | 96'

சிறு நகரமான பல்கேரியாவில், பகுதி நேரமாக வேலை செய்து வருகிறாள் ஐரினா. அவள் வேலையை விட்டு நீக்கப்படும் அதே நாளில் அவளது கணவன் மோசமான விபத்தை சந்திக்கிறான். அவளது குடும்பம் வறுமையில் சிக்குகிறது. குடும்பத்துக்காக வாடகைத் தாயாக மாறுகிறாள். ஏற்கனவே உடைந்து போயிருக்கும் அவளது வாழ்வில், வயிற்றில் வளரும் கருவால் நிறைய சண்டையும் அவநம்பிக்கையும் பெருகுகிறது. ஆனால் மெதுவாக, அன்பு, மன்னித்தல் ஆகியவற்றின் உண்மையான அர்த்தத்தை ஐரினா புரிந்துகொள்கிறாள்.

மாலை 7.00 மணி | SUMMER OF CHANGSHA / LIU YU TIAN | DIR: FENG ZU | CHINA | 2019 | 120'

அபின் ஒரு போலீஸ் துப்பறிவாளன். ஒரு வினோதமான கொலை வழக்கை விசாரிக்கும் போது, மருத்துவர் லீ ஸூவை சந்திக்கிறான். இருவரும் ஒருவருக்கு ஒருவர் பரிச்சயமாக, அபின் அந்த மர்மமான பெண்ணின் பால் ஈர்க்கப்படுகிறான். இரண்டு பேருமே தத்தமது காதல் கதைகளிலும், பாவங்களிலும் தத்தளித்துக் கொண்டிருப்பவர்கள். இந்த காதல் அந்த பாவங்களுக்கு விமோசனம் தேட உதவுமா?

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

விளையாட்டு

3 hours ago

க்ரைம்

3 hours ago

உலகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

வேலை வாய்ப்பு

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

கல்வி

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்