சென்னை பட விழா | தேவி | டிசம்.14 | படக்குறிப்புகள்

By செய்திப்பிரிவு

காலை 11.00 மணி | SIBYL / SIBYL | DIR: JUSTINE TRIET | FRANCE / BELGIUM | 2019 | 100'

உழைத்துக் களைத்த உளவியல் நிபுணர் சிபில். ஆரம்ப காலத்தில் தனக்குப் பிடித்திருந்த எழுத்து வேலைக்குத் திரும்புகிறார். ஆனால், அவரின் பேஷண்டும் நடிகையுமான மார்காட், சிபிலைச் சந்திக்கிறாள். மீண்டும் தனக்கு உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறாள். உளவியல் பணியை விட்டுவிட்டதாகக் கூறும் சிபில் அதை மறுக்கிறார். ஆனாலும் மார்காட்டின் சூழல், சிபிலை உதவச் செய்கிறது. மார்காட்டின் நிலைதடுமாறும் வாழ்க்கை குறித்துத் தெரிந்துகொள்ளும் சிபில், அவளுக்கு உதவ முடிவெடுக்கிறார். அது சில பிரச்சினைகளை நோக்கி சிபிலை உந்தித் தள்ளுகிறது.

2 wins & 5 nominations.

பிற்பகல் 2.00 மணி | PORTRAIT OF A LADY ON FIRE / PORTRAIT DE LA JEUNE ILLE EN FEU |DIR: CELINE SCIAMMA | FRANCE | 2019 | 119'

18-ம் நூற்றாண்டின் இறுதிக்காலம் அது. இளம் ஓவியர் மரியன், தனது மாணவர்களுக்கு வரைவது குறித்து வகுப்பெடுத்துக் கொண்டிருக்கிறாள். அப்போது அவளின் மாணவர், மரியனின் ஓவியம் குறித்துக் கேள்வி எழுப்புகிறார். கடந்த காலத்துக்குள் மூழ்குகிறாள் மரியன். ஃப்ரான்ஸ் தீவொன்றுக்கு ஹலோயீஸ் என்னும் இளம்பெண்ணை ஓவியம் வரையச் செல்கிறாள் மரியன். தன்னை வரைவதில் விருப்பமில்லாத ஹலோயீஸ் மறுப்புத் தெரிவிக்கிறாள். அவளுடன் மரியன் அன்பாகப் பழகுகிறாள். இருவரின் நட்பு அடுத்தகட்டத்துக்குச் செல்கிறது. குகையொன்றுக்கு நடைபயணம் செல்பவர்கள், முதல்முறையாக முத்தமிட்டுக் கொள்கின்றனர்... இப்படியாகச் செல்லும் மரியனின் வாழ்க்கையில் திடீர் திருப்பம் ஏற்படுகிறது... அது..

Nominated for 1 Golden Globe. Another 16 wins & 23 nominations.

மாலை 4.30 மணி | HOMESTAY / LINH HON TAM TRU | DIR: PARKPOOM WONGPOOM | THAILAND | 2018 | 132'

படத்தின் நாயகன் ஒரு மார்ச்சுவரியில் கண்விழிக்கிறான். குழம்பிப் போகும் அவன் அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்கிறான். அப்போது அவன் முன்னால் தோன்றும் சிலர் தங்களை ''தி கார்டியன்ஸ்'' என அறிமுகம் செய்து கொள்கின்றனர். அவர்கள் நாயகனிடம் இது அவனுக்கு இரண்டாவது வாய்ப்பு என்றும், தற்கொலை செய்து இறந்து போன மின் என்னும் இளைஞன் ஒருவனின் உடலில் இருக்கவேண்டும் எனவும் கூறுகின்றனர். மேலும் 100 நாட்களுக்குள் மின்னுடைய மரணத்துக்கான காரணத்தை கண்டுபிடிக்க வேண்டும் எனவும் இல்லையெனில் அவன் நிரந்தரமாக இறக்க நேரிடும் என்று கூறிகின்றனர். மின்னுடைய மரணத்தை நாயகன் கண்டுபிடித்தானா? அவன் யார்? என்ற கேள்விகளுக்கான விடையே 'HOMESTAY'.

மாலை 7.00 மணி | NINA WU / JUO REN MI MI | DIR: MIDI Z | TAIWAN | 2019 | 102'

மெரீமும் அவரது 10 வயது மகன் அஸிஸும் கும்பல் தாக்குதலில் தற்செயலாக சுடப்படுகிறார்கள். அஸுக்கு கல்லீரலில் காயம் ஏற்படுகிறது. அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். அப்போது மிகப்பெரிய ரகசியம் ஒன்று வெளிப்படுகிறது. தான் இதுவரை தந்தை என எண்ணி வந்த நபர் உயிரியல் ரீதியாக தனது தந்தை இல்லை என்ற விவரம் தெரிய வருகிறது. அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதை விவரிக்கிறது திரைப்படம்.

2 wins & 14 nominations

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

50 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

உலகம்

5 hours ago

ஆன்மிகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்