சென்னை சர்வதேச பட விழா | உட்லண்ஸ் | 25.12.2014 படங்களின் அறிமுகப் பார்வை

By செய்திப்பிரிவு

சென்னை 12-வது சர்வதேச பட விழாவில் கடைசி நாளான வியாழன் (25/12/2014) அன்று உட்லண்ஸ் திரையரங்கில் திரையிடப்படும் படங்களின் அறிமுகக் குறிப்புகள் இவை. மாலை 6.15 மணிக்கு நிறைவு விழா நடைபெறும். தொடர்ந்து விருது வெல்லும் தமிழ் திரைப்படம் திரையிடப்படும்.



காலை 10 மணி

The Owners/Kazakhstan/Adikhan Yerzhanov/93’/2014

ஒரு மோசமான சூழ்நிலையில் இரு சகோதரர்களும் அவர்களது உடல்நிலை சரியல்லாத தங்கையும் வீட்டு சொந்தக்காரரால் வெளியேற்றப்படுகிறார்கள். வீட்டுச் சொந்தக்காரர்களின் அதிகாரம் படைத்த உறவினர் தலைமை போலீஸ்காரர் ஒருவரின் பின்புலத்திலிருந்து இதைச் செய்கிறார்கள். ஆனால் இந்தப் பையன்களின் தரப்பில் இவர்களைக் காப்பதற்கு யாரும் இல்லை. இதனால் வீட்டைவிட்டு வேறுவழியின்றி வெளியேறவேண்டிய நிலைதான்.

கஸகஸ்தான் தலைநகரம் அல்மேத்தியிலிருந்து அனைவரும் கிராமத்திற்கு திரும்பிவிடுகிறார்கள். இவர்களுடைய மூத்த சகோதரர் ஒரு மாவட்ட அதிகாரியாக இருப்பவர். ஆனால் அவர் ஒரு குடிகாரர். இவர்கள் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டதற்கு தலையிட்டு எந்தவித எதிர்ப்போ சண்டையோ போடவில்லை. 2014 கேன்ஸ் உலகத் திரைப்படவிழாவில் சிறப்புத் திரையிடல்.



மதியம் 11.45 மணி

Behaviour /Cuba/Mrsic Croatia/108’/2014

வெவ்வேறு பிரச்சினைகள், பலவீனங்கள், சிக்கல்களை பின்னணியாகக் கொண்ட, மதிப்பற்ற குடும்பங்களிலிருந்து வரும் குழந்தைகளுக்கு வயதான கார்மெலா டீச்சரை மிகமிகப் பிடிக்கும். காரணம் அக்குழந்தைகளின் குறைகளை அவர் பெரிதுபடுத்தமாட்டார். அதுமட்டுமின்றி அக்குழந்தைகள் ஏதாவது தவறு செய்துவிட்டார்கள் என்று புகார் வந்தால் உடனே அதற்கு சிரமேற்கொண்டு தண்டனைகளைத் தந்துவிடமாட்டார்.

மேலும், தண்டனைகள்மீது கார்மெலா டீச்சருக்கு நம்பிக்கையும் இல்லை. அவர் உடல்நிலை திடீரென்று மோசமாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போது இவருக்கு பதிலாக வேறு ஒரு ஆசிரியை பணியமர்த்தப்பட, அவர் சாலா என்கிற சிறுவன்மீது நடத்தை சரியில்லை என்று முத்திரை குத்திவிடுகிறார். அதற்காக அச்சிறுவனுக்கு ‘மறு கல்வி’ என்கிற மாபெரும் தண்டனையைப் பரிந்துரைத்துவிடுகிறார்.



மதியம் 1.30 மணி

Monument to Michael Jackson / Darko Lungulov / Serbia / 2014 / 94'

சோகம் என்றாலே அதில் கண்ணீர் கலந்திருக்கும் அல்லவா? ஒரு மனிதனின் வீழ்ச்சியை நகைச்சுவையாக கையாண்டிருக்கும் படம் தான் இது. சுற்றுலாத்தளமாக செரிபியாவில் அமைந்துள்ள பால்கன் எனும் சிற்றூரில் வெளிநாட்டு பயணிகளின் வருகை குன்றிட, சுற்றுலா பயணிகளை நம்பி பிழைப்பு நடத்திய ஊர் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. ஒருபுறம் தனது ஊர் அழிவினைக் கண்டிட, மறுபுறம் மனைவியும் தன்னிடமிருந்து விலக விவாகரத்து கேட்டிட நாயகன் மார்கோ சிந்திக்கத் தொடங்குகிறான்.

2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பாப் மேதை மைக்கேல் ஜாக்சன் தனது உலகபயணத்தை பற்றி அறிவித்திட ‘இது தான் சரியான நேரம் நம் ஊரில் மைக்கேல் ஜாக்சன்னுக்கு ஒரு சிலை வைத்தால் வெளிநாட்டவர் கவரப்படுவார்கள் இதன் வாயிலாக தன் ஊரையும், மண வாழ்க்கையையும் காப்பற்றிடலாம் என வினோதமாக எண்ணி மார்கோ ஒரு திட்டம் தீட்டுகிறான். இதன் பிறகு நடக்கும் விபரீதங்கள் தான் படத்தின் மையம்.



மாலை 3.15 மணி

Natural Sciences/Argentina/Matias Luchchesi/73/2014

பிறந்ததிலிருந்தே தனது தந்தையை பார்த்தறியாத 12 வயது பள்ளிச்சிறுமியின் மன அழுத்தத்தைப் பேசியுள்ள படம். அப்பா எங்கிருக்கிறார் என்று அம்மாவிடமும் சரியான பதில் கிடைக்காததால் அவளது கவலை நாளுக்குநாள் அதிகமாகிக்கொண்டே போகிறது. ஒருநாள் வகுப்பறையிலிருந்து வெளியேறியவள், வழியில் நின்றிருந்த குதிரையின் மீதேறி அமர்ந்துவிடுகிறாள்.

பள்ளியைவிட்டு, அந்த ஊரைவிட்டே தப்பித்துச் சென்றுவிடுகிறாள். அவளது தந்தை எங்காவது இருக்கிறாரா என வழியெங்கும் தேடிக்கொண்டே செல்கிறாள். காட்டின் குளிரும் இருட்டும் வாட்டியபோதும் அப்பா என்று ஒருவர் வந்துவிட்டால் எல்லாம் மாறிவிடும் என்ற நம்பிக்கை அவளுக்கு. ஆனால் வந்தது பாவ்லா பெரியாண்டோதான். அவள் சிறுமியின் பள்ளி ஆசிரியை.

பள்ளியின் மோட்டார் வாகனம் ஒன்றில் வந்த ஆசிரியை அவளை மீட்டெடுத்துச் செல்கிறாள். பள்ளியின் அதிகாரிகள், வகுப்பு ஆசிரியை, சிறுமியின் அம்மா என அனைவரும் இவளுக்கு உதவ முன்வருகின்றனர். ஆனால் கனிவுமிக்க ஆசிரியை பாவ்லோ பேரியாண்டோவின்மீதுதான் சிறுமிக்கு நம்பிக்கை வருகிறது. அதன்பிறகு வாழ்வின்மீதே நம்பிக்கை வரத் தொடங்குகிறது. 64வது பெர்லின் உலகப்படவிழாவில் சிறந்த குழந்தைப்படங்களுக்கான பளிங்குக்கரடி விருதுபெற்ற படம்.



மாலை 6.15 மணி

நிறைவு விழா நடைபெறும் தொடர்ந்து விருது வெல்லும் தமிழ் திரைப்படம் திரையிடப்படும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 min ago

இந்தியா

1 min ago

தமிழகம்

26 mins ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

விளையாட்டு

12 hours ago

மேலும்