சென்னை பட விழா | ஐனாக்ஸ் 2 | ஜன.11 | படக்குறிப்புகள்

By செய்திப்பிரிவு







சென்னை 14-வது சர்வதேச பட விழாவில் புதன்கிழமை (ஜன.11) ஐனாக்ஸ் 2 அரங்கில் திரையிடப்படும் படங்களில் அறிமுகக் குறிப்புகள் இவை »



காலை 10.15 மணி | MR.SIX / LAO PAO ER | DIR: HU GUAN | CHINA | 2015 | 137'



முரட்டுத்தனத்திற்கு பெயர்பெற்ற ஆனால் இப்போது தனிமையில் இருக்கும் இருக்கும் மிஸ்டர் சிக்ஸ் கடத்தப்பட்ட தன் மகன் போபியைக் கண்டுபிடிக்க தேவையான முயற்சிகள் எடுக்கிறார். ஒரு அரசாங்க அதிகாரி மகன் காரை போபி சேதப்படுத்திய பிறகு இச்சம்பவம் நடந்துள்ளது. அவர் வழக்கமாக கையாளும் முறைகளை பயன்படுத்தி நிலைமையை சரி செய்ய முயற்சிக்கும்போது அவமானப்படுகிறார். அவர் தனது மகனைப் பெற அவரது ஓய்வு பெற்ற கும்பலிடம் தன்னுடைய வேண்டுகோளை முன்வைத்து பழைய பள்ளிக்கூட பருவத்தின் தந்திரோபாயங்களைக் கையாள்கிறார்.

*****

பகல் 12,15 மணி | VISARANAI / INTERROGATION | DIR: VETRIMAARAN | TAMIL | 2015 | 118'



மு.சந்திரகுமார் எழுதிய 'லாக்கப்' என்னும் நாவலின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இந்தத் திரைப்படம் கசப்பான சில உண்மைகளை அப்பட்டமாகப் பேசுகிறது. காவல் துறை விசாரணையின் நிஜ முகத்தின் குரூரத்தைக் காட்டுகிறது. காவலர்கள் ஏன் அப்படிச் செய்கிறார்கள் என்பதையும் அவர்களால் எப்படி அதைச் செய்ய முடிகிறது என்பதையும் இயல்பாக வெளிப்படுத்துகிறது. அப்பாவிகள் மீது கொடுமைகளைக் கட்டவிழ்த்துவிடும் இவர்கள், வேறொரு தளத்தில் இதே அமைப்பின் பலிகடாக்களாக மாறும் முரண்பாட்டையும் சித்தரிக்கிறது.



வெற்றி மாறன் முன்னிறுத்தும் யதார்த்தம் முகத்தில் அறையும் நடைமுறை யதார்த்தம். நம்மை முழுமையாக உள்ளே இழுத்துக் கொள்ளும் சித்தரிப்புத் திறனுடன் இந்த யதார்த்தம் முன்வைக்கப்படும்போது அது நமக்கு நெருக்கமான அனுபவமாக மாறிவிடுகிறது. இந்தச் சூழலில் யாருக்குமே நிஜமான பாதுகாப்பு இல்லை என்பதைப் பார்வையாளர்களுக்கு உணர்த்திவிடுவது தான் இந்தப் படத்தின் பெரிய வெற்றி.



*****

பிற்பகல் 2.30 மணி | NOT WHAT IT LOOKS LIKE / NACIDA PARA GANAR | DIR: VICENTE VILLANUEVA | SPAIN | 2016 |100'



மாட்ரிடில் வசிக்கும் என்கார்னா நீண்டநாள் காதலன், எந்த ஊக்கமும் இல்லத வேலை என ஒரே மாதிரியான வாழ்க்கையில் சிக்கிக்கொண்டிருக்கிறாள். இதிலிருந்து தப்பிக்கும் வழியை தேடுகிறாள். ஒருநாள் அவளுடன் பள்ளியில் படித்த மரியா டோலர்ஸை சந்திக்கிறாள். அவள் பிரமிடை விற்கும் நிறுவனத்துக்கு என்கார்னாவை அறிமுகம் செய்கிறாள். அதன் தலைவி, தன்னை புகழ்பெற்ற நடிகை விக்டோரியா அப்ரில் என சொல்லிக்கொள்கிறாள். இதுதான் தான் தேடிய வாய்ப்பு என அந்த நிறுவனத்தில் சேரும் என்கார்னா பணமும், ஆடம்பரமும் கொண்ட, தான் நினைத்த வாழ்க்கையை வாழ ஆரம்பிக்கிறாள். ஆனால் தொடர்ந்து நடக்கும் சில நிகழ்வுகள் அவளது புது வாழ்க்கை முறையையும், அது எவ்வளவு தூரம் சட்டப்பூர்வமாக சரி என்றும் கேள்வி கேட்க வைக்கின்றன.

*****

மாலை 4,30 மணி | THE TIGER / DAE-HO | DIR: HOON-JUNG PARK | KOREA | 2015 | 139'



1925 கொரியா ஜப்பானியார்கள் ஆக்கிரமித்திருந்த காலம். துணிச்சலான வேட்டைக்காரர் சூன் மேன் டக் தனது வளரிளம் மகன் சியோக்குடன் மலையருகே ஒரு குடிசையில் வாழ்கிறார். ஓய்வுபெறும் காலத்திலும் மூலிகை பறித்துவர மலைக்குப் போவார். ஜிரிசான் மலையை அவர் மிகவும்நேசிப்பவர். ஆனால் அந்த மலைக்காட்டில் ஒரு புலி மக்களை அச்சுறுத்தி வருகிறது. அந்தப் புலி சூன் மேன் டக்குக்கும் ஒரு சவாலாக அமைகிறது.

*****

மாலை 7,15 மணி | 24 WEEKS / 24 WOCHEN | DIR: ANNE ZOHRA BERRACHED | GERMANY | 2016 | 102'



ஆறுமாத கர்ப்பிணிப் பெண் ஒருத்தி தனது வயிற்றில் உள்ள குழந்தைக்கு இதய வளர்ச்சி தாமதமாவதற்கான மரபணு நோய் இருப்பதை அறிகிறாள். இதனால் அவள் மனம் ஒரு நிலையில் இல்லை. குழந்தையை கருக்கலைப்பு செய்துவிடலாமா என்றும் யோசிக்கிறாள். அவளோ அவளது கணவனோ எப்படி ஒரு பிறக்காத குழந்தையின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் அல்லது இருக்காது என முடிவு செய்யமுடியும்? இறுதியில் அந்தக் கர்ப்பவதி தான் ஒருத்தியாக கருக்கலைப்பு குறித்த முடிவை எடுக்க முடியாது என உணர்கிறாள்.







VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

4 hours ago

இந்தியா

5 hours ago

வணிகம்

12 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

சுற்றுலா

5 hours ago

கல்வி

5 hours ago

மேலும்