சென்னை பட விழா | அண்ணா | டிசம்.14 | படக்குறிப்புகள்

By செய்திப்பிரிவு

காலை 9.30 மணி | RAFIKI | DIR: WANURI KAHIU  | KENYA | 2018 | 83'

கென்யாவை சேர்ந்த இரண்டு இளம்பெண்கள் ஒருவரையொருவர் காதலிக்கின்றனர். கென்யாவில் ஓரின சேர்க்கை குற்றம் என்பதால் மற்றவர்களுக்கு தெரியாமலேயே பல்வேறு இடங்களுக்கு செல்கின்றனர். ஒருநாள் இரு பெண்களில் ஒருவருடைய தாய்க்கு இவர்களின் காதல் தெரியவரவே இருவரும் தப்பித்து வேறொரு இடத்திற்கு செல்கின்றனர். ஆனால், இந்த செய்தி அப்பகுதி மக்களிடையே பரவ, அவர்கள் இருவரும் பிடிக்கப்பட்டு கைது செய்யப்படுகின்றனர். அதன்பிறகு, இருவரும் பெற்றோர்களால் பிரித்து வைக்கப்படுகின்றனர். பல்வேறு சிரமங்களிடையே இருவரும் ஒன்று சேர்வார்களா என்பதே படத்தின் முடிவு. தன்பால் ஈர்ப்பு கொண்டவர்களின் காதல் உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தியிருக்கும் இப்படம், 2018 கேன்ஸ் திரைப்பட விழாவில் வரவேற்புப் பெற்ற படம்

படத்தின் ட்ரெய்லர்

பகல் 12.00 மணி | CARMEN AND LOLA | DIR: ARANTXA ECHEVARRIA | SPAIN  | 2018 | 103'

ஸ்பெயினில் உள்ள பாரம்பரியமான ஜிப்ஸி சமூகத்தின் முரண்பாடுகளை இப்படம் எடுத்துக்காட்டுகிறது. பாலியல் மற்றும் நிறபேதம் சார்ந்த பிரச்சனைகள் அங்குள்ள வலுவான கலாச்சார பின்புலம் எவ்வளவு கடுமையாக எதிர்கொள்கிறது என்பதை இதில் காண முடிகிறது. தன்பால் ஈர்ப்பில் காதலில் விழும் இரு பெண்கள் சமூக ரீதியாக சந்திக்கும் பிரச்சினைகளிலிருந்து அவர்கள் மீண்டுவரப் போராடுகிறார்கள். அரண்ட்ஸா எகேவெரியா என்ற பெண் இயக்குநரின் படம் இது.

படத்தின் ட்ரெய்லர்

பிற்பகல் 2.30 மணி | VOLCANO / VULKAN | DIR: ROMAN BONDARCHUK  | UKRAINE | 2018 | 106'

லூகாஸ், இவர் ராணுவத்துக்கு மொழிபெயர்ப்பாளராக இருப்பவர். ஒரு பயணத்தின் போது தெற்கு உக்ரைனின் ஒரு சிறு ஊரில் சிக்கிக் கொள்கிறார்.  விசித்திர ஊரில் விசித்திரமான மனிதராக லூகாஸ். இங்கு துரதிர்ஷ்டவசமான பல நிகழ்வுகளுக்குள் வீழ்கிறார் லூகாஸ். கதை ஒரு டார்க் ஹியூமர் பாணியில் செல்லும், காட்சிகள் ஆழ்மன எதார்த்தச் சித்தரிப்புகளாக சர்ரியல் வண்ணம் கொள்கிறது.  கடுமையான சிறை உள்ளிட்ட அனுபவங்களுக்குப் பிறகு ஒரு வீட்டில் அடைக்கலமாகிறார். அங்கு வோவோ என்பவரும் அவரது மயக்கும் மகள் மருஷ்கா ஆகியோர் உள்ளனர். கதைப்போக்கு குறுக்குமறுக்காகச் செல்லும், நேர்கோட்டு திரைவாசகனுக்கு இந்தப் படம் வேறொரு வித்தியாசமான அனுபவத்தைக் கொடுக்கும்.

படத்தின் ட்ரெய்லர்

மாலை 4.30 மணி | THE FAMILY TOUR | DIR: LIANG YING  | TAIWAN / HONG KONG / SINGAPORE | 2018 | 107'

சீனாவின் பெண் திரைப்பட இயக்குநர் ஒருவர் ஹாங்காங்குக்கு நாடு கடத்தப்படுகிறார். அவர் நாடு கடத்தப்படுவதற்கான காரணம் அவர் மீது சுமத்தப்பட்ட அரசியல் சதியில் ஈடுபட்டதற்கான குற்றச்சாட்டு. அவரது திரைப்படம் தடை செய்யப்படுகிறது. அந்த பெண் இயக்குநர் தைவான் செல்லும் வழியில் தனது தாயுடன் மீண்டும் இணைகிறாள். இப்பயணம் இயக்குநருக்கு ஒரு குடும்பப் பயணமாக அமைகிறது. இயக்குநர் லியாங் யீங் பெற்ற உண்மை அனுபவமே திரைப்படமாகியுள்ளது.

படத்தின் ட்ரெய்லர்

மாலை 7.15 | DRESSAGE | DIR: POOYA BADKOOBEH  | IRAN | 2018 | 95'

ஈரானில் இன்று இளைஞர்களின் மனநிலையைப் படம்பிடித்துக்காட்டும் கதை. தனது தோழி இக்கட்டில் மாட்டிக்கொள்ள நேரிடும்போது அவளிடமிருந்து லாவகமாக ஒதுங்கிக்கொள்கிறார்கள் அவளது நண்பர்கள். டெஹ்ரான் நகரை சேர்ந்த 16 வயது பெண் கோல்ஸா. நண்பர்களோடு சேர்ந்து கொண்டு கடைகளில் திருடுபவள். அவள் திருடுவது ஒரு த்ரிலிங்கான அனுபவத்திற்காகத்தான். மற்றபடி பேராசை எண்ணமெல்லாம் இல்லை. ஒரு முறை திருடும்போது கண்காணிப்பு கேமராவை அகற்ற மறந்து விடுகிறார்கள். அடுக்கடுக்கான சம்பவங்களால் கோல்ஸா பெறும் அனுபவங்கள் அவளுக்கு நிறைய பாடங்களைக் கற்றுத் தருகிறது.,

பெர்லின் திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்திற்கான விருதைப் பெற்ற படம். 2 விருதுகள் 3 பரிந்துரைகளைப் பெற்றுள்ளது.

படத்தின் ட்ரெய்லர்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

8 mins ago

இந்தியா

18 mins ago

இந்தியா

35 mins ago

தமிழகம்

51 mins ago

இந்தியா

46 mins ago

இந்தியா

59 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

மேலும்