சென்னை பட விழா | கேஸினோ | டிசம்.13 | படக்குறிப்புகள்

By செய்திப்பிரிவு

காலை 9.45 மணி | 492 (A MAN CALLED DEATH) / 492 (O NOME DA MORTE)   | DIR: HENRIQUE GOLDMAN   | BRAZIL | 2018 | 98'

ஜூலியோ சாண்டனாவின் உண்மையான கதை இது. ஒரு அடியாளாகவே வாழ்க்கையை ஓட்டிய இந்நபர் இதுவரை 492 பேரைக் கொன்றிருக்கிறார். சுமார் 35 வருடங்கள் வெளியுலகுக்கு தன்னைப் பற்றி தெரியாமல் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் சராசரியான வாழ்கையை வாழ்ந்தவர். மிக அமைதியான, அன்பான, நகைச்சுவை குணம் கொண்டசாண்டனா எவ்வாறு இந்தக் கொலை சம்பங்களில் ஈடுபட்டார் என்பதை சுவாரசியமாக கூறுகிறது இத்திரைப்படம்.

படத்தின் ட்ரெய்லர்:

பகல் 12.15 மணி | DAYAN  | DIR: BEHROUZ NOURANIPOUR | IRAN  | 2018 | 81'

போர் தொடங்கிய நாளுக்கு அடுத்த நாள். எல்லைப்பகுதியில் தீவிரவாதிகளால் நிறுத்தப்பட்ட ஆயிரக்கணக்கான சிரிய அகதிகள் சொந்த குடும்பத்தினரோடு மீண்டும் சேர முடியாத நிலை. ஒரு வயதான சிரிய தந்தை நாட்டைவிட்டு வெளியேறி தன் குடும்பத்தினரோடு வசிக்கிறார். இரண்டு முடிவுகளில் ஒன்றை அவர் தேர்ந்தெடுக்க வேண்டும. ஒன்று, சிறப்புக் கவனம் எடுததுக் கொள்ளவேண்டிய குழந்தைகளோடு எப்படியாவது தீவிரவாதிகளிடமிருந்து தப்பிக்க வேண்டும். அல்லது ராணுவத்தினரின் கருணையோடு குடும்பத்தைப் பாதுகாக்க வேண்டும். முடிவெடுக்க அவர் போராடும் தவிப்பைத் தொடர்ந்து அவரது குடும்பம் சிதறுகிறது. உயிர்வாழ முடியும் என்ற நம்பிக்கையும் மெல்ல மெல்ல கைவிட்டுப் போகிறது. குர்திஸ்தானின் கடுமையான பனி படர்ந்த மலைகளில் படம்பிடிக்கப்பட்ட நேர்த்தியான ஒளிப்பதிவு இந்த கதையின் தீவிரத்தை உணர வைக்கிறது. சொந்த மண்ணிலிருந்து வெளியேறி எங்கோ பனிப்பொழிவில் சிக்கி அவதியுறும் அப்பாவி மக்களின் துயரம் கண்முன் நிறுத்தியுள்ளார் இயக்குநர் பெஹ்ரூஸ் நூராணிபூர்.

படத்தின் ட்ரெய்லர்:

பிற்பகல் 2.45 மணி | AL ASLEYEEN | DIR: MARWAN HAMED  | EGYPT | 2017 | 125'

கதையின் நாயகன் பெயர் சமீர் எலீவா. சமீர் எலீவாவுக்கு சிறிய குடும்பம் உள்ளது. வங்கியில் பணியாற்றும் சமீருக்கு ஆட்குறைப்பு நடவடிக்கையால் வேலையை இழப்பு ஏற்படுகிறது. தனது குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக வேலை தேடி சமீர் அலைகிறார். அப்போது அவருக்கு ஒரு செல்போன் கிடைக்கிறது. அந்த செல்போனில் கடந்த காலம் குறித்த புதிரான வீடியோவை சமீர் பார்க்கிறார். அதன்பின் அவருக்கு வரும் செல்போன் அழைப்பும், சமீரின் வாழ்க்கையில் நடக்கும் மாற்றங்களும்தான் மீதிக்கதை. அடுத்து என்ன நடக்கும் என்ற ஆவலை ஏற்படுத்தும் மிகவும் சுவரஸ்யமான, த்ரிலிங்கான திரைக்கதை. சிறந்த ஒளிப்பதிவு உள்ளிட்ட 9 விருதுகளை இப்படம் பெற்றுள்ளது.

படத்தின் ட்ரெய்லர்:

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

க்ரைம்

2 hours ago

உலகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

வேலை வாய்ப்பு

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

கல்வி

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

மேலும்