சென்னை பட விழா | அண்ணா | டிசம்.21 | படக்குறிப்புகள்

By செய்திப்பிரிவு

சென்னை 15-வது சர்வதேச பட விழாவில் வியாழக்கிழமை (டிசம்.21) அண்ணா திரையரங்கில் திரையிடப்படும் படங்களின் அறிமுகக் குறிப்புகள் இவை »

காலை 9.30 மணி | LOVE ME NOT | DIR: ALEXANDROS AVRANAS | GREEK | 2017 | 99'

ஒரு தம்பதியினர் ஓர் இளம் புலம்பெயர்ந்த பெண்ணை வாடகைக்கு எடுத்துக்கொண்டு அவரை தங்களது இரவல் தாயாக இருக்க வைத்துக்கொள்கிறார்கள். அவளும் இவர்களது அழகிய வில்லாவிற்கு வந்துவிடுகிறாள். தம்பதிகளில் ஆண் மட்டும் வெளியே வேலைக்கு சென்றுவிட அங்குள்ள பெண்ணுடன் இந்த புலம்பெயர்ந்த பெண்ணும் நல்ல நட்புறவு கொண்டு அந்த வீட்டில் இணைந்து மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். அப் பெண் மகிழ்ச்சிக்கு தள்ளப்படுவதற்குப் பின்னால் அந்த வீட்டுப் பெண் மிகுந்த மனச்சோர்வுக்கு ஆளாகிறாள். இரவல் தயான அப்பெண்ணுடன் மோதலும் ஏற்படுகிறது. பிறகு அவள் காரில் செல்வதற்காக வெளியேறுகிறாள். அதே இரவு அவளுடைய கணவனுக்கு தொலைபேசி அழைப்பு வருகிறது. அவன் மனைவி இறந்துவிட்டாள் என. அவளது எரிந்த உடல் உடைந்த காரில் கண்டுபிடிக்கப்படுகிறது.

பகல் 12 மணி | THE CHARMER / CHAMOREN | DIR: MILAD ALAMI | DENMARK / DANISH / PERSIAN | 2017 |100'

இஸ்மாயில், இளம் ஈரானிய இளைஞன், டென்மார்கில் தான் நிலையாக தங்குவதற்கு ஒரு பெண்ணின் உதவியை நாடுகிறான். அந்த சந்திப்பு தள்ளிப்போக, இஸ்மாயில் காதலில் விழ, கடந்த கால பிரச்சினை ஒன்றும் சேர்ந்து அவனை துரத்துகிறது.

பிற்பகல் 2.30 மணி | THE MARRIAGE / MARTESA | DIR: BLERTA ZEQUIRI | ALBANIAN| 2017 | 69'

அனிதா மற்றும் பேகிம் இருவரின் திருமணமும் இன்னும் இரண்டு வாரங்களே உள்ளன. அந்த முக்கியமான நிகழ்வுக்காக இறுதிகட்ட பணிகளில் இருவரும் மூழ்கியுள்ளனர். 1999ல் நடந்த கொசாவா போருக்குப் பின்னர் அனிதாவின் பெற்றோர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட போதிலும், போகிமின் கட்டுப்பாட்டுமிக்க குடும்பம் என்பதால் பிரச்சனையை வருங்கால தம்பதிகள் இருவரும் முன்தயாரிப்புகளோடு எப்படியோ சமாளிக்கிறார்கள். ஆனால் பேகிமின் முன்னாள் ரகசிய காதலனான நோல் வெளிநாட்டிலிருந்து எதிர்பாராதவிதமாக திரும்புகிறான். இந்த நேரத்தில் சூழ்நிலை சிக்கலுக்குள்ளாகிறது. இப்பொழுதும் நோல் இவனை காதலிப்பதை புரிந்துகொள்கிறான். தவிர்க்க முடியாத வகையில், அசாதாரண முக்கோணக் காதல் எப்படி அவிழ்க்க ஆரம்பிக்கும் போகிறதோ என்ற பதற்றத்துடன் திருமண விருந்து ஆரம்பமாகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

1 min ago

வணிகம்

5 mins ago

சினிமா

2 mins ago

உலகம்

24 mins ago

வணிகம்

30 mins ago

இந்தியா

40 mins ago

இந்தியா

50 mins ago

இந்தியா

57 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்