மே 26, 2023 | தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைவு

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மே 26) சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.44,840-க்கு விற்பனையாகிறது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. தொடர்ந்து ஏற்ற இறக்கம் கண்டு வரும் தங்கம் மே 4-ம் தேதி சவரனுக்கு ரூ.352 அதிகரித்து, ரூ.46,000 என்ற புதிய உச்சத்தை எட்டியது. அதையடுத்து, தங்கம் விலையில் பெரிய அளவில் மாற்றம் ஏதும் இல்லை. இந்தநிலையில் நீண்ட நாட்களுக்கு பின்னர் தங்கம் விலை 45 ஆயிரத்திற்கும் கீழாக குறைந்திருக்கிறது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (வெள்ளிக்கிழமை) கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.5,605-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.44,840-க்கு விற்பனையாகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.48,576-க்கு விற்பனையாகிறது.

இதேபோல், வெள்ளி கிராமுக்கு 0.30 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.76.20-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை இன்று ரூ.76,200 ஆக இருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

5 hours ago

சினிமா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

வணிகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

க்ரைம்

10 hours ago

சுற்றுச்சூழல்

10 hours ago

க்ரைம்

10 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்