ஜிஎஸ்டி நடைமுறையை அரசு கண்காணித்து வருகிறது: நிதித்துறை இணையமைச்சர் அர்ஜூன் ராம் மேகவால் கருத்து

By செய்திப்பிரிவு

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட்டு வருவதை மத்திய அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது என்று மத்திய நிதித்துறை இணையமைச்சர் அர்ஜூன் ராம் மேகவால் தெரிவித்தார். பஞ்சாப்,ஹரியாணா டெல்லி தொழில் வர்த்தக சபை ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய போது இதனை தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:ஜிஎஸ்டி தொடர் பாக அவ்வப்போது எழும் பிரச்சினைகள் உடனடியாக சரிசெய்யப்பட்டு வருகின்றன. மேலும் ஜிஎஸ்டி எவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது என்பதை மத்திய அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. வரி செலுத்தும்போது உள்ள சில தொழில்நுட்ப கோளாறுகள் எழுந்துள்ளன. அந்த கோளாறுகளை சரிசெய்து வருகிறோம்.

ஜிஎஸ்டியால் பொருட்களின் விலையேற்றம் மற்றும் விலை குறைவு போன்றவற்றை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். 180 அதிகாரிகள் மற்றும் 30 அமைச்சர்கள் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பல மாவட்டங்கள் மற்றும் நகரங்களில் மேற்கொள்ளும் தொழில்களில் ஜிஎஸ்டி மூலம் என்னென்ன நடைமுறை சிக்கல்கள் இருக்கிறது என்பது குறித்த விவரங்களை சேகரித்து வருகிறோம். இந்த சிக்கல்கள் வரி அதிகாரிகள் மூலம் சரிசெய்யப்படும்.

செக்யூரிட்டி மற்றும் கமாடிட்டி சந்தையில் மெய்நிகர் பணப் பரிவர்த்தனையை அறிமுகப்படுத்துவதற்கு உடனடி கொள்கை முடிவுகளை எடுக்கமுடியாது. பெரும்பான்மையான மக்களின் பார்வை மெய்நிகர் பணப் பரிவர்த்தனைக்கு எதிராக உள்ளது. சமீபத்தில் நாடாளுமன்றத்தில் இதுதொடர்பாக நிறைய கேள்விகள் எழுப்பப்பட்டன.மெய்நிகர் பணப் பரிவர்த்தனையில் உள்ள நன் மை தீமைகளை ஆராய்வதற்கு குழு அமைக்கப்பட்டுள் ளது என்று மேகவால் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

17 mins ago

ஜோதிடம்

29 mins ago

தொழில்நுட்பம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

சினிமா

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

மேலும்