ரிலையன்ஸ் பொது காப்பீடு ஐபிஓ-வுக்கு ஐஆர்டிஏ அனுமதி

By செய்திப்பிரிவு

ரிலையன்ஸ் ஜெனரல் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் பொதுப்பங்கு வெளியீட்டுக்கு (ஐபிஓ) காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் (ஐஆர்டிஏ) அனுமதி அளித்திருக்கிறது. ரிலையன்ஸ் கேபிடல் நிறுவனத்தின் 100 சதவீத துணை நிறுவனம் இது. நடப்பு நிதி ஆண்டில் ஐபிஓ வெளியிட இந்த நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. ரிலையன்ஸ் ஜெனரல் இன்ஷூரன்ஸில் இருந்து 25 சதவீத பங்குகளை விலக்கிக்கொள்ள ரிலையன்ஸ் கேபிடல் முடிவெடுத்திருக்கிறது.

ரிலையன்ஸ் ஜெனரல் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் மதிப்பு ரூ.7,000 கோடி இருக்கும் என கணிக்கப்பட்டிருக்கிறது. மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதி ஆண்டில் ரூ.3,935 கோடிக்கு பிரீமியம் வசூல் செய்திருக்கிறது. இந்த நிதி ஆண்டில் வரிக்கு முந்தைய லாபம் ரூ.130 கோடியாக இருக்கிறது.

தற்போது ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லைப் நிறுவனம் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகும். அதே சமயம் ஹெச்டிஎப்சி ஸ்டாண்டர்டு லைப் மற்றும் எஸ்பிஐ லைப் ஆகிய நிறுவனங்கள் ஐபிஓ வெளியிடத் திட்டமிட்டுள்ளன. -பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

கருத்துப் பேழை

17 mins ago

இந்தியா

23 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

29 mins ago

வலைஞர் பக்கம்

1 hour ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்