இவரைத் தெரியுமா?- அஜய் கன்வால்

By செய்திப்பிரிவு

ஸ்டாண்டர்டு சார்டர்டு வங்கியின் தெற்கு ஆசிய பிராந்தியத்தின் தலைமைச் செயல் அதிகாரி. 2015-ம் ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி முதல் இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.

2006-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை சிங்கப்பூரில் உள்ள ஸ்டாண்டர்டு சார்டர்டு வங்கி கன்ஸ்யூமர் பேங்கிங் பிரிவுக்குத் தலைவராக இருந்தவர்.

இதே வங்கியின் கொரிய நாட்டின் பிரிவுக்கு தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பில் இருந்தவர்.

மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஜவஹர்லால் நேரு பொறியியல் கல்லூரியில் எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலி கம்யூனிகேஷன் பிரிவில் இன்ஜினீயரிங் பட்டமும் எல்.என் வெல்லிங்கர் மேலாண்மை கல்லூரியில் மார்க்கெட்டிங் பிரிவில் எம்பிஏ பட்டமும் பெற்றவர்.

சிட்டி வங்கியில் மேலாளராக தனது பணியைத் தொடங்கியவர்.

தைவான் இந்தியா தொழில் கூட்டமைப்பின் ஆலோசகராக இருந்தவர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

இந்தியா

40 mins ago

கருத்துப் பேழை

24 mins ago

தமிழகம்

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

6 hours ago

தமிழகம்

6 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்