மேற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு இந்திய ஏற்றுமதி அதிகரிப்பு

By செய்திப்பிரிவு

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கான இந்திய ஏற்றுமதி 22 சதவீதம் அதிகரித்துள்ளது. 2013 ஏப்ரல் முதல் 2014 பிப்ரவரி மாதம் வரையான காலத்தில் இப்பிராந்திய நாடுகளுக்கான இந்திய ஏற்றுமதி 600 கோடி டாலரைத் தொட்டுள்ளது.

நைஜீரியாவுக்கு மட்டும் ரூ.14,526 கோடி மதிப்பிலான பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. கானாவுக்கு ரூ. 4,651 கோடி மதிப்புக்கு பொருள்கள் ஏற்றுமதியாகியுள்ளன. பெனின் நாட்டுக்கு ரூ 4,384 கோடி மதிப்பிலான பொருள்களும், டோகோவுக்கு ரூ. 2,524 கோடி மதிப்பிலான பொருள்களும், செனகலுக்கு ரூ. 1,964 கோடி மதிப்பிலான பொருள்களும், கேமரூனுக்கு ரூ.1,235 கோடி மதிப்பிலான பொருள்களும், லைபீரியாவுக்கு ரூ. 580 கோடி மதிப்பிலான பொருள்களும் ஏற்றுமதியாயின.

இது தவிர கினியா, மாலி, புர்கினா பாசோ ஆகிய நாடுகளுக்கான ஏற்றுமதியும் கணிசமாக உயர்ந்துள்ளது. நைஜெர், ஜாம்பியா, கினியா பிஸாவ் ஆகிய நாடுகளுக்கான ஏற்றுமதியும் உயர்ந்துள்ளது. மறு ஏற்றுமதி உள்பட இந்திய ஏற்றுமதி 957 கோடி டாலராகும் (ரூ. 1,80,469 கோடி).

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஓடிடி களம்

1 min ago

வணிகம்

13 mins ago

இந்தியா

38 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தொழில்நுட்பம்

1 hour ago

சினிமா

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

2 hours ago

க்ரைம்

2 hours ago

வணிகம்

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்