எல்பிஜி விற்பனையில் இறங்கியது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

By செய்திப்பிரிவு

மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இப்போது எல்பிஜி விற்பனையில் இறங்கி இருக்கிறது. முதல் கட்டமாக 4 கிலோ எல்பிஜி சிலிண்டர்களை இந்த நிறுவனம் விற்கத் தொடங்கி இருக்கிறது. இரண்டாம் காலாண்டு முடிவுகளை தொடர்ந்து நடந்த முதலீட்டாளர்களுடனான கலந் துரையாடலில் இந்த தகவல் வெளியாகி இருக்கிறது.

சோதனை அடிப்படையில் நான்கு மாவட்டங்களில் இந்த விற்பனை தொடங்கப்பட்டிருக் கிறது. ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான ஆறுமாதத்தில் எல்பிஜி நுகர்வு 10.2 சதவீதம் அளவுக்கு உயர்ந்திருக்கிறது. தனியார் சுத்திகரிப்பு நிறுவனங் களான ரிலையன்ஸ் மற்றும் எஸ்ஸார் இந்த சந்தையில் கணிச மாக பங்கினை கைப்பற்ற நுழைந் திருக்கின்றன. ஆறு மாத காலத் தில் 1.08 கோடி டன் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. இதில் பாதி அளவு இறக்குமதி செய்யப்படுகிறது.

தற்போது இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை நிறுவனங்கள் மட்டுமே சில்லரை விற்பனையில் உள்ளன. 5 கிலோ, 14.2 கிலோ மற்றும் 19 கிலோ சிலிண்டர்களில் எல்பிஜி விற் பனை செய்யப்படுகிறது. வருடத் துக்கு 12 சிலிண்டர்கள் (14.2 கிலோ) மானியவிலையில் வீடுகளுக்கு வழங்கப்படுகின்றன. கூடுதலாக தேவைப்படும் பட்சத்தில் சந்தையில் விற்கப்படுகின்றன. வணிக பயன்பாட்டுக்கு 19கிலோ சிலிண்டர்கள் சந்தையில் விலையில் விற்கப்படுகின்றன.

தனியார் நிறுவனங்கள் சந்தை விலைக்கே எல்பிஜியை விற்க முடியும். ஆனால் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்குபவர்களுக்கு மானிய விலை சிலிண்டர் கிடையாது என்பதால் தனியார் நிறுவனங்களுக்கு ஒரு வாய்ப்பு உருவாகி இருக்கிறது.

ரிலையன்ஸ் எவ்வளவு விலைக்கு விற்கிறது என்பது குறித்த தகவலை வெளியிடவில்லை. ரிலையன்ஸ் நிறுவனம் 1.2 லட்சம் டன் அளவுக்கு எல்பிஜி-யை விற்க கடந்த வருடம் மத்திய அரசு அனுமதி வழங்கியது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

51 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சுற்றுலா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

மேலும்