பிஎஸ்யு கடன் வழங்குவோர் தரவரிசையில் பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா முதலிடம்

By செய்திப்பிரிவு

சென்னை: 2021-22-ம் ஆண்டில் பொதுத்துறை கடன் வழங்குபவர்களில், கடன் மற்றும் டெபாசிட் வளர்ச்சியின் அடிப்படையில் பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது.

புனேவை தலைமையிடமாக கொண்ட இவ்வங்கி மார்ச் 2022 இறுதியில் மொத்த முன்பணத்தில் 26 சதவீதம் அதிகரித்து, ரூ.1,35,240 கோடியாகபதிவு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து, ஸ்டேட் பாங்க் மற்றும் பாங்க் ஆஃப் இந்தியா ஆகியவை 10.27% மற்றும் 9.66% வளர்ச்சியுடன் உள்ளன.

பாங்க் ஆஃப் மகாராஷ்டிராவுடன் ஒப்பிடும்போது, ஸ்டேட் வங்கியின் மொத்த கடன் 18 மடங்கு உயர்ந்து, ரூ.24,06,761 கோடியாக உள்ள நிலையில், யூனியன் வங்கியின்மொத்த கடன் 5 மடங்கு உயர்ந்து ரூ.6,99,269 கோடியாக உள்ளன.

வைப்புத்தொகை வளர்ச்சியைப் பொறுத்தவரை, பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா 16.26 சதவீத வளர்ச்சியைக் கண்டு, கடந்த மார்ச் 2022 நிறைவில் ரூ.2,02,294 கோடியைத் திரட்டியுள்ளது. யூனியன் பாங்க் 11.99% வளர்ச்சியுடன்(ரூ.10,32,102 கோடி) இரண்டாவது இடத்தில் உள்ளது.

தரவுகளின் அடிப்படையில் பாங்க் ஆஃப் மகாராஷ்டிராவின் மொத்த வணிக வளர்ச்சி 20% உயர்ந்து ரூ.3,37,534 கோடியாக உள்ளது. இதைத் தொடர்ந்து, யூனியன் பாங்க் ரூ17,31,371 கோடியுடன் இருந்தது. ரேம் (சில்லறை விற்பனை, விவசாயம் மற்றும் எம்.எஸ்.எம்.இ.) பிரிவின் அடிப்படையில் பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா 18.65 சதவீத வளர்ச்சி விகிதத்தை (ரூ.80,669 கோடி) பதிவு செய்துள்ளது.

மார்ச் 2021-ல் வங்கியின் மொத்த செயல்படா சொத்துகள் 7.23 சதவீதத்தில் இருந்து 3.94 சதவீதமாகக் குறைந்துள்ளது. அதேசமயம், நிகர செயல்படா சொத்துகள் மார்ச் 2021-ல் 2.48 சதவீதத்தில் இருந்து 0.97 சதவீதமாகக் குறைந்தது. ரூ. 550 கோடியில் இருந்து 2 மடங்கு உயர்ந்து, 2022 மார்ச் வரையிலான முழு ஆண்டுக்கு இவ்வங்கியின் நிகர லாபம் ரூ.1,152 கோடியாக இருந்தது.

நடப்பு நிதியாண்டில் பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா நிகர லாபத்தில் 25-30 சதவீத வளர்ச்சியை எதிர்பார்க்கிறது. 2021-ல் ரூ.4,897 கோடியாக இருந்த நிகர வட்டி வருவாய், 23.42% அதிகரித்து 2022-ல் ரூ.6,044 கோடியாக உள்ளது. l

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

உலகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

7 hours ago

சினிமா

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்