ஜிஎஸ்டி வசூல் சாதனை: மே மாதத்தில் 44% உயர்வு; தமிழகத்தில் ரூ.7,910 கோடி வசூல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மே 2022-ல் மொத்த ஜிஎஸ்டி வருவாய் கடந்த ஆண்டைவிட 44% அதிகரித்து ரூ.1,40,885 கோடி வசூலாகியுள்ளது. தமிழ்நாட்டில் மே 2021-ல் ரூ.5,592 கோடியாக இருந்த ஜிஎஸ்டி வசூல் மே 2022–ல் 41% அதிகரித்து ரூ.7,910 கோடி வசூலாகியுள்ளது.

இதுகுறித்து மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:

சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி மொத்த வருவாய் மே 2022-ல் ரூ.1,40,885 கோடி வசூலாகியுள்ளது. இதில் மத்திய ஜிஎஸ்டியாக ரூ.25,036 கோடியும், மாநில ஜிஎஸ்டி-யாக ரூ.32,001 கோடியும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி-யாக ரூ.73,345 கோடியும் (இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் மீது வசூலிக்கப்பட்ட ரூ.37,469 கோடி உட்பட) செஸ் வரியாக 10,502 கோடியும் (இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் மீது வசூலிக்கப்பட்ட ரூ.931 கோடி உட்பட) வசூலாகியுள்ளது.

ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி-யிலிருந்து மத்திய ஜிஎஸ்டி-க்கு ரூ.27,924 கோடியும், மாநில ஜிஎஸ்டி-க்கு ரூ.23,123 கோடியையும் அரசு வழங்கியுள்ளது. இதற்கு பிறகு மே மாதத்தில் மத்திய அரசுக்கான மொத்த வருவாயாக ரூ.52,960 கோடியும், மாநில ஜிஎஸ்டி-க்கு ரூ.55,124 கோடியும் கிடைத்துள்ளது. இது தவிர ஜிஎஸ்டி இழப்பீடாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 31.05.2022 நிலவரப்படி ரூ.86,912 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது.

மே 2022-ல் ஜிஎஸ்டி வருவாய் கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்தில் இருந்ததைவிட 44% அதிகரித்துள்ளது. ஜிஎஸ்டி வரி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு நான்காவது முறையாக ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.40 லட்சம் கோடியை தாண்டியுள்ளது.

தமிழ்நாட்டில் மே 2021-ல் ரூ.5,592 கோடியாக இருந்த ஜிஎஸ்டி வசூல் மே 2022–ல் 41% அதிகரித்து ரூ.7,910 கோடி வசூலாகியுள்ளது. புதுச்சேரியில், மே 2021-ல் 123 கோடியாக இருந்த ஜிஎஸ்டி வசூல், மே 2022-ல் 47% அதிகரித்து ரூ.181 கோடி வசூலாகியுள்ளது.
இவ்வாறு தெரிவித்துள்ளது.

அதேசமயம் கடந்த ஏப்ரல் மாதத்தில் இதுவரை இல்லாத அளவு ஜிஎஸ்டி வசூல் ரூ.1.68 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஏப்ரல் மாதத்தை ஒப்பிடுகையில் மே மாதத்தில் 16 சதவீதம் குறைந்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

வலைஞர் பக்கம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

இந்தியா

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்