வாராக் கடனுக்கு கடுமையான விதிகளை உருவாக்க வேண்டும்: வங்கிகளுக்கு ஆர்பிஐ வலியுறுத்தல்

By பிடிஐ

வாராக் கடன்களுக்கு எதிராக வங்கிகள் கடுமையான விதிகளை வகுக்க வேண்டும் என வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வலியுறுத்தியுள்ளது. இதன் மூலம் வங்கிகளின் வாராக்கடன் சுமையை குறைக்க அறிவுறுத்தியுள்ளது. தனி நபர்கள் அல்லது குறிப்பிட்ட நிறுவனத்திற்கு அதிகமாக கடன் வழங்குவது குறித்த விதிகளை வங்கிகள் கடுமையாக்க வேண்டும் என்று வங்கிகளுக்கு ஆர்பிஐ பரிந்துரை செய்துள்ளது.

2017-18 ஆண்டில் அறிமுகப்படுத்துவதற்கு ஏற்ப இந்த புதிய விதிமுறைகளுக்கான கட்டமைப்பு வேலைகளை வங்கிகள் தொடங்க முன்மொழிந்துள்ளது. குறிப்பிட்ட கடனாளிகளாக இருந்தாலும் வழக்கமான கடன் வழங்கும் விதிமுறைகளையே எதிர்காலத்தில் கடைபிடிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

2017-18 ஆம் ஆண்டிலிருந்து இந்த கூடுதல் விதிமுறைகளை வங்கிகள் கடைபிடிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது. மேலும் வங்கிகள் அங்கீகரிக்கப்பட்ட வழிகளில் கடன் ரிஸ்க்கு ஏற்ப கூடுதலாக வராக்கடன் ஒதுக்கீடு செய்து கொள்ள அந்த அறிக்கை பரிந்துரைத்துள்ளது.

வங்கி நடைமுறைகளில் நிலையான வாராக்கடன் ஒதுக்கீட்டை 3 சதவீதம் உயர்த்திக் கொள்ளவும் இந்த ஆலோசனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கை தொடர்பாக மே 30 வரை வங்கிகள் தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம் என ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது.

வங்கிகளின் தற்போதைய வாராக்கடன் அளவை குறைக்கும் விதமாக ரிசர்வ் வங்கி இந்த அறிக்கையை அனுப்பியுள்ளது. கடந்த டிசம்பர் மாத இறுதி நிலவரப்படி ரூ. 1 கோடிக்கும் அதிகமாக கடன் வாங்கி திருப்பி அளிக்காமல் 77,036 நிறுவனங்கள் உள்ளன. இதனால் வங்கிகளின் வாராக்கடன் அளவை குறைக்க அதிக கவனம் செலுத்துவதும், நடைமுறைகளை தீவிரப்படுத்துவதும் அவசியம் என்று கூறியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

விளையாட்டு

3 hours ago

க்ரைம்

3 hours ago

உலகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

வேலை வாய்ப்பு

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

கல்வி

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்