பிப்ரவரி மாத கார் விற்பனையில் ஏற்ற இறக்கம்

By பிடிஐ

பிப்ரவரி மாதத்தில் உள்நாட்டு கார் விற்பனையில் மந்த நிலை நீடிக்கிறது. மாருதி சுசூகி நிறுவனத்தின் கார் விற்பனையில் சிறிய ஏற்றம் இருக்கிறது. கடந்த வருடம் பிப்ரவரியில் 1,07,892 கார் விற்பனையாகி இருந்த நிலையில், இப்போது 1,08,115 கார்கள் விற்பனையாகி இருக்கிறது. இட ஒதுக்கீடு கோரி ஜாட் சமூகத்தினர் போராட்டம் நடத்தியதன் காரணமாக இந்த நிறுவனத்தின் உற்பத்தி குறைந்திருக்கிறது. சுமார் 10,000 கார்கள் குறைவாக உற்பத்தி செய்யப்பட்டதாக நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

சிறிய ரக கார்களான வேகன் ஆர் மற்றும் ஆல்டோ ரக கார் களின் விற்பனையில் 11.2 சதவீதம் சரிந்திருக்கிறது. மற்ற கார்களான ஸ்விப்ட், டிசையர், ரிட்ஸ் ஆகிய கார்களின் எண்ணிக்கை சிறிதளவு உயர்ந்திருக்கிறது.

ஹூண்டாய் நிறுவனத்தின் பிப்ரவரி கார் விற்பனை 9.1 சதவீதம் உயர்ந்திருக்கிறது. கடந்த வருட பிப்ரவரியில் 37,305 கார்கள் விற்பனை செய்திருந்தது. இப் போது 40,716 கார்கள் விற்பனை செய்துள்ளது. எலைட் ஐ20, கிராண்ட், கிரெடா ஆகிய கார்களின் விற்பனை காரணமாக விற்பனை உயர்ந்ததாக விற்பனை பிரிவு துணைத்தலைவர் ராகேஷ் வஸ்தவா தெரிவித்தார்.

மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் விற்பனை 18.41 சதவீதம் உயர்ந்திருக்கிறாது. கடந்த வருடம் பிப்ரவரியில் 34,918 வாகனங்கள் விற்பனையா னது. இப்போது 41,348 விற்பனை யானது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் விற்பனை 20 சதவீதம் சரிந்திருக்கிறது. கடந்த வருடம் பிப்ரவரியில் 13,767 வாகனங்கள் விற்பனையானது. இப்போது 10,962 வாகனங்கள் விற்பனையானது.

ரெனால்ட் இந்தியாவின் கார் விற்பனை இரு மடங்கு உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் பிப்ரவரியில் 3,419 கார்கள் விற்பனையானது. இப்போது 8,834 கார்கள் விற்பனையாகி உள்ளன. க்விட் ரக மாடல் விற்பனை உயர காரணம் என்று ரெனால்ட் தெரிவித்திருக்கிறது.

இரு சக்கர வாகன விற்பனை பொறுத்தவரை ஹீரோமோட்டோ கார்ப் நிறுவனத்தின் பிப்ரவரி மாத விற்பனை 14 சதவீதம் உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் பிப்ரவரியில் 4,84,769 இரு சக்கர வாகனங்கள் விற்பனையானது. இப்போது 5,50,992 வாகனங்கள் விற்பனையானது.

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் விற்பனை 63 சதவீதம் உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் பிப்ரவரியில் 30,240 வாகனங்கள் விற்பனையானது. இப்போது 49,156 வாகனங்கள் விற்பனையானது.

மற்றொரு இரு சக்கர வாகன நிறுவனமான யமஹாவின் விற்பனை 49.96 சதவீதமாக இருக்கிறது. கடந்த வருடம் 37,982 வாகனங்கள் விற்பனையான நிலையில் இப்போது 56,960 வாகனங்கள் விற்பனையானது.

சென்னையை சேர்ந்த டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் பிப்ரவரி மாத விற்பனை 7.28 சதவீதம் உயர்ந்திருக்கிறது. கடந்த பிப்ரவரியில் 2,04,565 வாகனங்கள் விற்பனையாகி இருந்த நிலையில் இப்போது 2,19,467 வாகனங்கள் விற்பனையாகி உள்ளன.





VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 min ago

க்ரைம்

40 mins ago

உலகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

வேலை வாய்ப்பு

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

கல்வி

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

மேலும்