ஏர்டெல் ப்ரீபெய்ட் கட்டணம்  25% வரை உயர்வு: எந்தெந்த திட்டங்களுக்கு எவ்வளவு அதிகம்?

By செய்திப்பிரிவு

முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல், ப்ரீபெய்ட் திட்டங்களுக்கு 20-25 சதவீத கட்டணம் உயர்த்தப்படுவதாக இன்று அறிவித்துள்ளது.

கடந்த ஜூலை மாதத்தில் ஏர்டெல் அதன் போஸ்ட் பெய்டு திட்டங்களுக்கான கட்டண விகிதத்தினை அதிகரித்தது. இந்த நிலையில் தற்போது ப்ரீபெய்டுக்கும் கட்டண விகிதத்தினை அதிகரித்துள்ளது.

அடிப்படையான டாப் அப் திட்டங்களும் உயர்த்தப்பட்டுள்ளன. இதன்படி 48 ரூபாய் திட்டம், 58 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் 3 ஜிபி டேட்டா கிடைக்கும்.

இதில் 98 ரூபாய் திட்டம், 118 ரூபாயாகவும், 251 ரூபாய் திட்டம், 301 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

இதனை தவிர இலவச கால் வசதியுடன் கூடிய டேட்டா திட்டத்திற்கான கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளன. இதன்படி 28 நாட்கள் கொண்ட 298 ரூபாய் திட்டம் 359 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதில் அன்லிமிடெட் கால் சேவை, தினசரி 100 இலவச எஸ் எம் எஸ், தினசரி 2 ஜிபி டேட்டா கிடைக்கும்.

399 ரூபாய் திட்டத்தினை, 479 ரூபாயாக அதிகரித்துள்ளது. இது 56 நாட்கள் வேலிடிட்டி கொண்டது. இதிலும் அன்லிமிடெட் கால் சேவை, தினசரி 100 இலவச எஸ் எம் எஸ், தினசரி 1.5 ஜிபி டேட்டா கிடைக்கும்.

379 ரூபாய் திட்டத்தினை, 455 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதுவும் 84 நாட்கள் வேலிடிட்டியாகும். இதிலும் அன்லிமிடெட் கால் சேவை, தினசரி 100 இலவச எஸ் எம் எஸ், 6 ஜிபி டேட்டா கிடைக்கும்.

598 ரூபாய் திட்டத்தினை, 719 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதுவும் 84 நாட்கள் வேலிடிட்டியாகும். இதிலும் அன்லிமிடெட் கால் சேவை, தினசரி 100 இலவச எஸ் எம் எஸ், தினசரி 1.5 ஜிபி டேட்டா கிடைக்கும்.

698 ரூபாய் திட்டத்தினை, 839 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதுவும் 84 நாட்கள் வேலிடிட்டியாகும். இதிலும் அன்லிமிடெட் கால் சேவை, தினசரி 100 இலவச எஸ் எம் எஸ், தினசரி 2 ஜிபி டேட்டா கிடைக்கும்.

இதுபோலவே ஆண்டு முழுவதுக்குமான திட்டங்களுக்கான கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளன.

இதில் 1,498 ரூபாய் திட்டத்தினை, 1,799 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 2,498 ரூபாய் திட்டத்திற்கான கட்டணம் 2,999 ரூபாயாக அதிகரித்துள்ளது.

ஏஆர்பியு நெட்வொர்க் மற்றும் ஸ்பெக்ட்ரமுக்கு தேவைப்படும் கணிசமான முதலீடுகளை செயல்படுத்தும் நோக்கத்துடன் கட்டண உயர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் 5ஜி சேவை வெளியிட ஏர்டெல் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் இந்த கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய கட்டணங்கள் நவம்பர் 26-ம் தேதிமுதல் அமலுக்கு வருகிறது.




VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

7 mins ago

தமிழகம்

28 mins ago

இந்தியா

14 mins ago

இந்தியா

57 mins ago

உலகம்

1 hour ago

வணிகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

வாழ்வியல்

5 hours ago

மேலும்