செல்போன் டவர் வருமானம் 10% வளர்ச்சி: மூடி’ஸ் அறிக்கை

By பிடிஐ

செல்போன் கோபுரங்களை (டவர்) நிர்வகிக்கும் நிறுவனங்களின் வருமானம் அடுத்த 2 ஆண்டுகளில் 10 சதவீதம் அதிகரிக்கும் என்று மூடிஸ் அறிக்கை கூறியுள் ளது. அடுத்த இரண்டு ஆண்டு களில் 3ஜி, 4ஜி சேவை விரி வாக்கம் காரணமாக மேலும் அதிக மான தொலைத்தொடர்பு கோபுர வருமானம் அதிகரிக்க வாய்ப்புள் ளது என்று முதலீட்டாளர் சேவை நிறுவனமான மூடிஸ் கூறியுள்ளது.

இந்த துறையில் தொடர்ச்சியான வளர்ச்சியை எதிர்பார்க்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார் மூடிஸ் நிறுவனத்தின் பகுப்பாய்வு பிரிவு உதவி துணை தலைவரான நிதி துருவ். மேலும் செல்போன் சேவை வழங்கும் நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர் சேவையில் வலுவான நிலைக்கு செல்கின்றன. 3ஜி சேவை விரிவாக்கம் மற்றும் 4ஜி சேவைக்கான முதற்கட்ட பணிகளில் உள்ளன. இதனால் அதிகமான கோபுரங்கள் தேவை எழுந்துள்ளது. அதே நேரத்தில் தங்கள் கைவசமுள்ள சொந்த கோபுரங்களை விற்பனை செய்தும் வருகின்றன என்று குறிப்பிட்டார்.

அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்த துறையின் ஆண்டு வருமான வளர்ச்சி 8 முதல் 10 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டார். இந்த அறிக்கை இந்தியா மற்றும் இந்தோனேசியா தொலைதொடர்பு கோபுரங்கள் நிர்வகிக்கும் நிறுவனங்களை அடிப்படையாகக் கொண்டு ஆய்வு செய்துள்ளது. இந்த இரண்டு சந்தைகளிலும் கையகப்படுத்து தல் மற்றும் இணைப்பு நட வடிக்கைகள் அடுத்த இரண்டு மூன்று ஆண்டுகளில் அதிகமாக இருக்கும் என்று கூறியுள்ளது.

தொலைத் தொடர்பு சேவை நிறுவனங்கள் தங்கள் வசம் உள்ள கோபுரங்களை விற்பனை செய்து வருகின்றன. இந்த நிதியைக் கொண்டு தொழில் விரிவாக்கம் செய்கின்றன. மேலும் தங்க ளது கடன் சுமைகளைக் குறைக் கும் நடவடிக்கையாகவும் கோபுரங் களை விற்கின்றன. சொந்த கோபுரங் களைவிட குத்தகை (லீஸ்) மூலமான கோபுரங்கள் உத்தி ரீதியாக சிறந்த பலன்களை அளிக்கின்றன என்று கூறியுள்ளது.

இந்திய செல்போன் கோபுர நிறுவனங்களுக்கு மிகப் பெரிய சந்தை உள்ளது என்று குறிப் பிட்டுள்ள மூடிஸ், இந்தோனேசிய சந்தையோடு ஒப்பிட்டுள்ளது. குறைவான லாபம் இருந்தாலும் இந்திய நிறுவனங்களின் செயல்கள் மிக வலுவாக உள்ளது. கோபுர நிறுவனங்களின் முதலீடுகளுக்கு ஒழுங்குமுறை அமைப்புகளின் கொள்கைகளும் பக்க பலமாக உள்ளன என்று மூடிஸ் அறிக்கை கூறியுள்ளது.

செல்போன் கோபுர துறையில் 100 சதவீத அந்நிய முதலீட்டை அரசு அனுமதித்துள்ளது. ஆனால் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் இந்த அளவை 74 சதவீதமாக குறைக்க வலியுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

இந்தியா

57 mins ago

தமிழகம்

33 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

க்ரைம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

வாழ்வியல்

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்