தொழில்துறை உற்பத்தி குறியீடு; நீடித்த வளர்ச்சியை காட்டுகிறது: மத்திய நிதியமைச்சகம் 

By செய்திப்பிரிவு

2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கான தொழில்துறை உற்பத்தி குறியீடு என்பது தொழில்துறை உற்பத்தியில் நீடித்த வளர்ச்சியை காட்டுகிறது என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:

2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்துக்கான தொழில் உற்பத்தி குறியீடு (ஐஐபி) குறித்த விரைவான மதிப்பீடுகள், தொழில் உற்பத்தியில் நிலையான வளர்ச்சியைக் காட்டுகிறது. 2021-22 நிதியாண்டில் ஐஐபி முதலாம் காலாண்டில் சராசரியாக 121.3 என்ற அளவிலிருந்து 2-ம் காலாண்டில் 130.2 ஆக வளர்ச்சியடைந்துள்ளது.

2-ம் காலாண்டில் இது மேலும் அதிக அளவிற்கு இருந்திருக்கக்கூடும். பருவ மழைத் தீவிரம் காரணமாக நிலக்கரி வெட்டியெடுப்பதில் இடையூறு ஏற்பட்டு இதன் விளைவாக மின்சார உற்பத்தியில் தாக்கம் ஏற்பட்டதால், ஒட்டுமொத்த உற்பத்தி குறியீட்டு வளர்ச்சி குறந்தது.

ஐஐபி-யில் உற்பத்தி குறியீடு படிப்படியாக வளர்ச்சியடைந்தது அதன் பயனாக கொள்முதல் மேலான்மை குறியீடும் அதிகரித்தது.

முதல் காலாண்டில் சராசரி 74-ஆக இருந்த மூலதனப் பொருட்கள் குறியீடு 2-ம் காலாண்டில் கணிசமான அளவுக்கு உயர்ந்து 91.7 ஆக இருந்தது.

2021-22 நிதியாண்டில் நுகர்வும் அதிகரித்ததால் முதலீட்டுக்கான தெளிவான அறிகுறிகள் தென்படுகின்றன. முதல் காலாண்டில் 91.7 ஆக இருந்த நுகர்வோர் நீடிப்பு குறியீடு 2-ம் காலாண்டில் 121.2 ஆக உயர்ந்தது.

இவ்வாறு மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

சினிமா

3 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

சினிமா

8 hours ago

இந்தியா

8 hours ago

மேலும்