ராணுவ தளவாட தயாரிப்பில் இறங்கும் ரிலையன்ஸ்: 12 தொழில் அனுமதிகள் பெற்றது

By ஐஏஎன்எஸ்

பாதுகாப்புத் துறையைச் சார்ந்த தளவாடங்கள் தயாரிப்பதற்கு 12 லைசென்ஸ்களை அனில் அம்பா னிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் குழுமம் பெற்றுள்ளதன் மூலம் 6000 கோடி டாலர் வாய்ப்புகள் ரிலையன்ஸ் குழுமத்துக்கு உள்ளது என தகவல் அறிந்தவர்கள் கூறியுள்ளனர்.

இந்தியா மற்றும் வெளிநாடு களுக்கான ரணுவம் மற்றும் பாது காப்பு சார்ந்த கருவிகள் உபகர ணங்களை தயாரிப்பதற்கு ரிலை யன்ஸ் இன்பிராஸ்ட்ரெக்சர் நிறுவ னத்தின் துணை நிறுவனமான ரிலை யன்ஸ் டிபன்ஸ் நிறுவனத்துக்கு அரசு ஏற்கெனவே 12 தொழில் துறை அனுமதிகளை வழங்கியுள்ளது.

இந்த துறையில் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ராணுவம் மட்டுமல் லாமல், விண்வெளி துறை சார்ந்தும் வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக இந்திய கடற்படைக்கு ரூ.9000 கோடிக்கு நீரிலும், நிலத்திலும் செல்லகூடிய வாகனங்கள், ரூ.20 ஆயிரம் கோடிக்கு சிறிய ரக ஹெலி காப்டர்கள், ரூ. 50 ஆயிரம் கோடிக்கு பெரிய ரக ஹெலிகாப்டர்கள் தயாரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.

எல்லா வகையான நிலத்திலும் செல்லகூடிய வாகனங்கள், ஏவுக ணைகளுக்கான ரூ. 1 லட்சம் கோடிக் கான வாய்ப்புகளும் அடுத்த 10 முதல் 15 ஆண்டுகளில் நிறுவனம் எதிர்பார்த்துள்ளது. நீருக்கு அடியில் செல்லும் வாகனங்கள், ஆயுதங்கள், ரேடார்கள், ஆளில்லாத வான்வெளி கருவிகள் மற்றும் சில முக்கிய மின்னணு கருவிகளுக்கான வாய்ப்புகளும் நிறுவனத்துக்கு உள்ளது.

பிபாவவ திட்டத்தின்படி ரூ.30 ஆயிரம் கோடிக்கு, ரஷ்யாவில் சில தேர்ந்தெடுத்த கப்பல் கட்டும் தளங்களில் போர்கப்பல்கள் கட்டும் அடுத்த திட்டத்தையும் ரிலையன்ஸ் எதிர்பார்த்துள்ளது. ரிலையன்ஸ் குழுமம் இந்தியாவின் கடலோர பகுதிகளில் இரண்டாவது கப்பல் கட்டும் தளத்தை அமைக்கவும் திட்டமிட்டு வருகிறது.

ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனம் ஏற்கெனவே விண்வெளி துறை ஆராய்ச்சி சார்ந்து திருபாய் அம்பானி விண்வெளி பூங்காவை மஹாராஷ்டிரா மாநிலத்தில் நாகபுரி அருகே அமைத்துள்ளது. மேலும் பெங்களூருவில் விண்வெளி சார்ந்த பயிற்சி மையத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நாகபுரியில் அமைந்துள்ள விண்வெளி பூங்கா 400 ஏக்கரில் அமைந்துள்ளது, பல வெளிநாட்டு நிறுவனங்களும் விண்வெளி ஆய்வு சார்ந்த உபகரணங்களை இங்கு தயாரிக்கின்றன. இது விண்வெளி மற்றும் மின்னணுவியல் சார்ந்த மிகப்பெரிய உற்பத்தி கேந்திரமாக உருவாக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

14 mins ago

இந்தியா

29 mins ago

இந்தியா

47 mins ago

இந்தியா

56 mins ago

இந்தியா

1 hour ago

உலகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

2 hours ago

மேலும்