ஸ்நாப்பிஸ் நிறுவனத்தில் ரத்தன் டாடா முதலீடு

By செய்திப்பிரிவு

டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா பெங்களூரை சார்ந்த தொழிநுட்ப ஸ்டார்ட் அப் நிறுவனமான `ஸ்நாப்பிஸ்’ (SnapBizz) நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார். இது 2016-ம் ஆண்டில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் ரத்தன் டாடா செய்யும் எட்டாவது முதலீடு ஆகும். இதுவரை 20 ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் டாடா முதலீடு செய்திருக்கிறார்.

2016-ம் ஆண்டு ஜனவரி மாதம், ஸ்நாப்பிஸ் நிறுவனம் ஜங்கிள் வெஞ்சர்ஸ், டாரஸ் வேல்யூ கிரியேஷன், கோன்லி வெஞ்சர்ஸ், புளூம் வெஞ்சர்ஸ் ஆகிய நிறுவனங்களிடமிருந்து 72 லட்சம் டாலர் நிதியை பெற்றது.

முறைப்படுத்தப்படாத துறையாக இருந்து வரும் சில்லரை வர்த்தகத் துறையை மாற்றும் நோக்கில் ஸ்நாப்பிஸ் செயல்பட்டு வருகிறது. தற்போது மும்பை, புனே, டெல்லி, ஹைதராபாத், சென்னை, பெங்களூர் ஆகிய இடங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மளிகை கடைகளுடன் இந்த நிறுவனம் இணைந்து செயல்படுகிறது. மேலும் இதை விரிவுபடுத்தவும் திட்டமிட்டு இருக்கிறார்கள்.

“ரத்தன் டாடா முதலீடு செய்திருப்பது எங்களின் தொழில் தொழில் யோசனைக்கு மிகப் பெரிய ஊக்கம் அளிக்கிறது. நாங்கள் சிறு கடைகளில் ட்ஜிட்டல் புரட்சியை தொடர்ந்து செய்வோம்” என்று ஸ்நாப்பிஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி பிரேம் குமார் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

எப்எம்ஜிசி துறையில் இயங்கி வரும் ஸ்நாப்பிஸ் நிறுவனம் 2013-ம் ஆண்டு ஆரம்பிக்கப் பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

9 mins ago

இந்தியா

34 mins ago

விளையாட்டு

57 mins ago

தமிழகம்

57 mins ago

தொழில்நுட்பம்

1 hour ago

சினிமா

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

2 hours ago

வணிகம்

2 hours ago

சினிமா

2 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

மேலும்