குட்கா நிறுவனத்தில் ரூ.831.72 கோடி அளவுக்கு ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு: டெல்லியில் ஒருவர் கைது

By செய்திப்பிரிவு

பதிவு செய்யாமல், ஜிஎஸ்டி வரி செலுத்தாமல் டெல்லியில் செயல்பட்டு வந்த குட்கா நிறுவனத்தில் மத்திய ஜிஎஸ்டி அதிகாரிகள் சோதனை நடத்தி, ரூ.831.72 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு செய்யப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர்.

டெல்லியில் சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த குட்கா/பான் மசாலா நிறுவனத்தில் மத்திய ஜிஎஸ்டி மேற்கு ஆணையரக அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். அங்கு புகையிலைப் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு நாடு முழுவதும் அனுப்பப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பதிவு செய்யப்படாத அந்த நிறுவனத்தில் 65 பேர் பணியாற்றிவந்தனர். இங்கு ரூ.4.14 கோடி அளவிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சுமார் ரூ.831.72 கோடி அளவுக்கு இந்நிறுவனம் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்திருந்தது மதிப்பிடப்பட்டது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார். மேலும் விசாரணைகள் தொடர்ந்து நடக்கின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

46 mins ago

சினிமா

56 mins ago

உலகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

39 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

கல்வி

1 hour ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

மேலும்