இந்தியா வர்த்தகம்: டிசம்பரில் ஏற்றுமதி சரிவு

By செய்திப்பிரிவு

2020-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நாட்டின் ஏற்றுமதி 26.89 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. இது கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தை விட 0.80 சதவீதம் குறைவாகும்.

ஏப்ரல் முதல் டிசம்பர் வரையில் 200.55 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த இந்தியாவின் ஏற்றுமதி, கடந்த ஆண்டு இதே காலத்தை விட 15.8 சதவீதம் குறைவாகும்.

2020-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நாட்டின் இறக்குமதி 42.60 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. இது கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தை விட 7.6 சதவீதம் அதிகமாகும். ஏப்ரல் முதல் டிசம்பர் வரையில் இந்தியாவின் இறக்குமதி 258.29 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. கடந்த ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடுகையில் 29.08 சதவீதம் எதிர்மறையான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

2020 டிசம்பர் மாதத்தில் இந்தியாவின் நிகர இறக்குமதியின் வர்த்தக பற்றாக்குறை 15.71 பில்லியன் அமெரிக்க டாலர். இது கடந்தாண்டு டிசம்பரில் பதிவான 12.49 பில்லியன் அமெரிக்க டாலர் வர்த்தக பற்றாக்குறை உடன் ஒப்பிடும் போது 25.78% என்னும் அளவுக்கு கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

பெட்ரோலியம் அல்லாத பொருட்களின் ஏற்றுமதி 2020-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 24.73 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தைவிட இது 5.17 சதவீதம் நேர்மறை வளர்ச்சியாகும்.

எண்ணெய் இறக்குமதி 2020 டிசம்பர் மாதத்தில் 9.61 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. இது கடந்தாண்டு டிசம்பர் மாதம் 10.72 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. இது 10.37% எதிர்மறையான வளர்ச்சியாகும்.

எண்ணெய் அல்லாத பொருட்களின் இறக்குமதி 2020 டிசம்பர் மாதத்தில் 33.0 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. இது கடந்தாண்டு டிசம்பர் மாதம் 28.88 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. இது 14.27% நேர்மறையான வளர்ச்சியாகும்.

பிற தானியங்கள் (262.62%), எண்ணெய் உணவுகள் (192.60%), இரும்புத் தாது (69.26%), தானியங்கள் தயாரிப்பு மற்றும் இதர பதப்படுத்துதல் பொருட்கள் (45.41%), தரைவிரிப்பு உள்ளிட்ட சணல் உற்பத்தி (21.93%) உள்ளிட்டவை கடந்த டிசம்பர் மாத ஏற்றுமதியில் நேர்மறையான வளர்ச்சியைக் கண்டுள்ளன.

வெள்ளி (-90.52%), செய்தித்தாள் (-76.27%), தோல் மற்றும் தோல் பொருட்கள் (-38.93%), போக்குவரத்து உபகரணங்கள் (-32.05%), கச்சா பருத்தி மற்றும் கழிவுகள் (-28.79%) உள்ளிட்டவை கடந்த டிசம்பர் மாத இறக்குமதியில் எதிர்மறையான வளர்ச்சியைக் கண்டுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

22 mins ago

இந்தியா

40 mins ago

இந்தியா

32 mins ago

கருத்துப் பேழை

1 hour ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

உலகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்