பட்ஜெட் விருப்பம்; ரிசர்வ் வங்கி தாக்கல் செய்த அறிக்கை: நிதி வளர்ச்சி குழு ஆய்வு

By செய்திப்பிரிவு

நிதி நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சி குழுவின் 23வது கூட்டம், காணொலி காட்சி மூலம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று நடந்தது.

இதில் மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், நிதித்துறை ஒழுங்கு முறையாளர்கள் உட்பட மத்திய அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் முக்கிய பொருளாதார வளர்ச்சிகள், சர்வதேச மற்றும் உள்நாட்டு நிதி நிலைத்தன்மை விஷயங்கள் குறித்து
ஆலோசிக்கப்பட்டன.

மத்திய அரசு மற்றும் நிதித்துறை ஒழுங்குமுறையாளர்கள் எடுத்த கொள்கை நடவடிக்கைகள் நாட்டில் விரைவான பொருளாதார மீட்பை உறுதி செய்ததாக இந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் எடுத்துள்ளதாகவும், பொருளாதார மீட்பு, முன்பு கூறப்பட்டதைவிட வேகமாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது. பொருளாதார வளர்ச்சியை விரைவு படுத்த, மேலும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

பட்ஜெட் விருப்பங்கள் குறித்து ரிசர்வ் வங்கி தாக்கல் செய்த அறிக்கை குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

30 mins ago

இந்தியா

35 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

3 hours ago

வணிகம்

10 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

சுற்றுலா

3 hours ago

கல்வி

3 hours ago

மேலும்