ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்குவிக்க ரூ.10,000 கோடி ஆரம்ப நிதி: பியூஷ் கோயல்

By செய்திப்பிரிவு

ஸ்டார்ட் அப் எனப்படும் புது நிறுவனங்களை ஊக்குவிக்கவும், அவற்றின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், அவற்றுக்கு பல்வேறு பலன்களை அரசு அறிமுகப்படுத்தியுள்ளதாக மத்திய வர்த்தக தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறினார்.

இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தின் ஸ்டார்ட் அப் மந்தன் 2.0 என்னும் நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், புது நிறுவன சூழலியலை விரிவுபடுத்துவதற்காக உள்ளீடுகளையும், ஊக்கத்தையும் அரசு தொடர்ந்து வழங்கி வருவதாகக் கூறினார்.

வரி சலுகை உட்பட பல்வேறு நன்மைகளை ஸ்டார்ட் அப்களுக்கு அரசு வழங்கி வருவதாக அவர் கூறினார். "ரூ.10,000 கோடி ஆரம்ப நிதியுடன், புது நிறுவனங்களுக்கு உதவுவதற்கான நிதியம் ஒன்றை அரசு அமைத்துள்ளது," என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் பேசிய அமைச்சர், நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசு நிறுவனங்களுக்கு புது நிறுவனங்கள் தங்களது பொருட்களையும், சேவைகளையும் வழங்குவதற்கான சம வாய்ப்பை அரசின் மின்சந்தை வழங்கி வருவதாகவும் கூறினார்.

தற்சார்பை நோக்கி இன்றைக்கு இந்தியா முன்னேறி வருவதாகவும், புது நிறுவனங்கள் அதற்கு வழி காட்டுவதாகவும் கோயல் குறிப்பிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

52 mins ago

விளையாட்டு

1 hour ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

க்ரைம்

3 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

க்ரைம்

4 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

சுற்றுலா

5 hours ago

மேலும்