பொருளாதார சுழற்சி; மூலதன செலவினங்களை அதிகரிக்க திட்டம்: நிர்மலா சீதாராமன் ஆய்வு

By செய்திப்பிரிவு

பொருளாதாரத்தில் செலவினங்களை அதிகரிப்பதற்கான ஆய்வுக் கூட்டத்தை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நடத்தினார்.

மின்சார மற்றும் சுரங்கங்கள் அமைச்சகங்கள் மற்றும் அணுசக்தி துறையின் செயலாளர்கள், இந்த அமைச்சகங்களுக்கு சொந்தமான 10 மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் நிர்வாக இயக்குநர்கள் ஆகியோருடன் ஆய்வுக் கூட்டமொன்றை மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நடத்தினார்.

இந்த நிறுவனங்களின் மூலதன செலவை ஆய்வு செய்வதற்காக நடந்த இந்தக் கூட்டம், கோவிட்-19 பெருந்தொற்றைத் தொடர்ந்து பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க பல்வேறு பங்குதாரர்களுடன் நிதி அமைச்சர் நடத்தி வரும் தொடர் கூட்டங்களில் ஐந்தாவதாகும்.

2020-21-ஆம் ஆண்டுக்கான மூலதன செலவு இலக்கான ரூ 61483 கோடியில், ரூ 24227 கோடி (39.4 சதவீதம்) 2020 நவம்பர் 23 வரை செலவிடப்பட்டிருக்கிறது.

மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாட்டை ஆய்வு செய்த நிர்மலா சீதாராமன், இவற்றின் மூலதன செலவுகள் பொருளாதார வளர்ச்சியை ஊக்கப்படுத்தும் கருவிகளில் முக்கியமானதென்றும், 2020-21 மற்றும் 2021-22-ஆம் நிதி ஆண்டுகளில் இவற்றை அதிகப்படுத்துவது அவசியமென்றும் கூறினார்.

மூலதன செலவுகளுக்கான இலக்குகளை எட்டுவதற்காக அமைச்சகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் எடுத்து வரும் முயற்சிகளை அமைச்சர் பாராட்டினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

56 mins ago

இந்தியா

3 hours ago

வலைஞர் பக்கம்

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

5 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

இந்தியா

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்