மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க நடவடிக்கை: நிதின் கட்கரி

By செய்திப்பிரிவு

நமது நாட்டின் வாகன உற்பத்தித் தொழிலை உலகத்துடன் தொய்வின்றி இணைப்பதற்கான சர்வதேசப் போட்டித்திறனை உருவாக்கும் லட்சியத்துடன் அரசு செயல்பட்டு வருவதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

'வாகன சேவைகள் 2020- மின்சார போக்குவரத்து மாநாடு 2020- புதிய நடைமுறையில் வாய்ப்புகளை பெறுதல்' என்னும் காணொலி மாநாட்டில் பேசிய அவர், நாட்டில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கான சூழலியலை உருவாக்க அரசு முயற்சித்துக் கொண்டிருக்கிறது என்று கூறினார்.

மாசை குறைப்பதற்கான விரிவான தேசிய லட்சியத்தை அடைவதற்காக இணைந்து பணிபுரியுமாறு வாகன உற்பத்தி தொழில்களை அமைச்சர் வலியுறுத்தினர்.

சரக்கு மற்றும் சேவை வரியை 5 சதவீதமாக குறைத்தது, பேட்டரி விலையை வாகனத்தின் விலையிலிருந்து பிரித்தது உள்ளிட்ட மின் வாகனங்களை ஊக்குவிப்பதற்கான அரசின் பல்வேறு நடவடிக்கைகளை அவர் பட்டியலிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

13 mins ago

தமிழகம்

24 mins ago

இந்தியா

18 mins ago

தமிழகம்

35 mins ago

வாழ்வியல்

26 mins ago

இந்தியா

40 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

57 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

மேலும்