ஜிஎஸ்டி பற்றாக்குறை; தெலங்கானாவுக்கு ரூ.2,380 கோடி சிறப்புக் கடன்: நிதியமைச்சகம் அனுமதி 

By செய்திப்பிரிவு

ஜிஎஸ்டி பற்றாக்குறையை சமாளிப்பதற்காக தெலங்கானாவுக்கு ரூ.2,380 கோடி சிறப்புக் கடன், மேலும் ரூ 5,017 கோடி பெற்றுக் கொள்ளவும் நிதியமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) செயல்படுத்தப்பட்டதால் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையை சமாளிப்பதற்காக மத்திய நிதி அமைச்சகம் வழங்கிய இரு விருப்பத் தேர்வுகளில் விருப்பத் தேர்வு-1-ஐ தெலங்கானா அரசு தேர்ந்தெடுத்திருப்பதாக தெரிவித்திருக்கிறது.

இதன் மூலம், விருப்பத் தேர்வு-1-ஐ தேர்ந்தெடுத்துள்ள 22 இதர மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களோடு (தில்லி, ஜம்மு & காஷ்மீர் மற்றும் புதுச்சேரி) தெலங்கானா இணைந்துள்ளது.

விருப்பத் தேர்வு-1-ஐ தெலங்கானா தேர்ந்தெடுத்துள்ளதால், ஜிஎஸ்டியால் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையை சமாளிப்பதற்காக சிறப்பு சாளரம் மூலம் அம்மாநிலத்துக்கு ரூ 2,380 கோடி சிறப்புக் கடன் கிடைக்கும். அதோடு, மேலும் ரூ 5,017 கோடி கடன் பெற்றுக் கொள்ளவும் தெலங்கானாவுக்கு அனுமதி கிடைக்கும்.

ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள இந்த சாளரத்தின் மூலம் இம்மாநிலங்களின் சார்பாக இந்திய அரசு ரூ 18,000 கோடியை கடனாக வாங்கி, அதை மூன்று தவணைகளில் 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

விளையாட்டு

11 hours ago

சினிமா

11 hours ago

இந்தியா

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்