ரூ.83.07 கோடி லாபம்: ஃபேக்ட் உரங்கள் நிறுவனம் சாதனை

By செய்திப்பிரிவு

பொதுத்துறை நிறுவனமான ஃபேக்ட் உரங்கள் நிறுவனம் அதிக உற்பத்தியில் ஈடுபட்டதுடன் உரங்கள் விற்பனையில், முடிவடைந்த காலாண்டில் ரூ.83.07 கோடி லாபம் ஈட்டி சாதனை படைத்துள்ளது.

2020 செப்டம்பர் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் ரூ.83.07 கோடி லாபம் பெற்று ஃபேக்ட் இந்த சாதனையைப் படைத்துள்ளது. மத்திய ரசாயன மற்றும் உரங்கள் துறை அமைச்சகத்தின் கீழ் பொதுத்துறை நிறுவனமான உரங்கள் மற்றும் கெமிக்கல்ஸ் திருவிதாங்கூர் லிமிடெட் (ஃபேக்ட்) நிறுவனம் செயல்படுகிறது. இ

ந்த நிறுவனமானது ஒரு காலாண்டில் இது வரை இல்லாத அளவுக்கு உயர்ந்த செயல்பாட்டு லாபத்தை பதிவு செய்துள்ளது. இதே காலகட்டத்தில் கடந்த ஆண்டு வெறும் ரூ.6.26 கோடி மட்டுமே லாபம் கிடைத்துள்ளது. தவிர இந்த நிறுவனம் கடந்த காலாண்டில் இதே காலகட்டத்தில் ரூ.931 கோடி வருவாய் ஈட்டியது. இதே காலகட்டத்தில் இந்த ஆண்டு ரூ.1047 கோடி வருவாய் ஈட்டி உள்ளது.

2020 செப்டம்பர் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில், நிறுவனத்தின் முதன்மையான தயாரிப்பான ஃபாக்டம்பாஸ் மற்றும் அமோனியம் சல்பேட் ஆகியவற்றின் உற்பத்தி மற்றும் விற்பனையில் இதுவரை இல்லாத அளவுக்கு அனைத்து காலாண்டுகளையும் விட அதிகமான சாதனை படைக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

32 mins ago

இந்தியா

52 mins ago

தமிழகம்

1 hour ago

உலகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சுற்றுச்சூழல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

க்ரைம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்