புதிய தொழில் தொடங்க வரிச்சலுகை அசோசேம் எதிர்பார்ப்பு

By பிடிஐ

ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு வரிச் சுதந்திரமான சூழல் உருவாக வேண்டும் என அசோசேம் தெரிவித்துள்ளது. பட்ஜெட் முன்னோட்டத்தில் நிதி அமைச்சர் அருண் ஜேட்லிக்கு அசோசேம் கோரிக்கை வைத்துள்ளது. ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு தொடக்க நிலையில் பங்குதாரர் கட்டுப்பாடுகள் மற்றும் நிதி திரட்டல் தேவைகள் காரணமாக இதை எதிர்பார்ப்பதாக கூறியுள் ளது.

வருமான வரிச் சட்டம் பிரிவு 79ன் படி ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பங்குதாரர்களை மாற்றுவது மற்றும் முதலீட்டாளர் களிடமிருந்து நிதி திரட்டுவது, நிறுவனத்தின் உண்மையான நிறுவனர்கள் தவிர நிர்வாகத்தை மாற்றமுடியாமல் இருப்பது போன்றவற்றில் நட்பு ரீதியான மாற்றங்கள் வேண்டுமென அசோசேம் அமைப்பு வருவாய் துறை செயலர் ஹஷ்முக் ஆதியாவுக்கு கோரிக்கை வைத்துள்ளது. இந்த சட்டம் வரி பொறுப்புகளை குறைப்பதற்காக பங்கு முதலீட்டை மாற்றுவதை கட்டுப்படுத்துவதையும் அசோசேம் சுட்டிக் காட்டியுள்ளது.

வரித்துறை அமைப்புகள் வரி செலுத்துவோர் ஒவ்வொரு வரையும் வாடிக்கையாளராக கையாளுகிறது. வருமான வரித்துறை வரி செலுத்துவோரை விளம்பர அணுகுமுறையோடு கடந்த காலங்களில் அணுகியது.

நிறுவனங்கள் வரி செலுத்து வதை ஊக்குவிக்கும் வகையில் வரி சட்டங்கள் மற்றும் வரி செலுத்தும் வசதிகளை அதிகரிக்க வேண்டும் என்று அசோசேம் பொது செயலாளர் டி.எஸ்.ராவத் கூறினார்.

மத்திய நேரடி வரி ஆணையம் மற்றும் மத்திய சுங்க மற்றும் கலால் வரி ஆணையத்துக்கும் மத்திய வருவாய்துறை ஆணை யம் மூலமாக கோரிக்கை வைத் துள்ளது. சட்ட உருவாக்கம் மற்றும் நிர்வாக வேலைகளை தனித்தனி யாக்க வேண்டும் என்றும் ஆலோ சனை கூறியுள்ளது. மேலும் இதர வரி சட்டங்கள் குறித்தும் அசோசேம் ஆலோசனை கூறி யுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

14 mins ago

தமிழகம்

25 mins ago

இந்தியா

19 mins ago

தமிழகம்

36 mins ago

வாழ்வியல்

27 mins ago

இந்தியா

41 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

58 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

மேலும்