எரிசக்தி மாற்றுத் திட்டம்; நெதர்லாந்துடன் நிதி ஆயோக் ஒப்பந்தம்

By செய்திப்பிரிவு

கரியமில வெளியேற்றத்தைத் தடுக்கவும், எரிசக்தி மாற்றுத் திட்டத்துக்காகவும் நோக்க அறிக்கையில் நிதி ஆயோக்கும், நெதர்லாந்து தூதரகமும் கையெழுத்திட்டன.

தூய்மையான மற்றும் அதிக அளவிலான எரிசக்திக்கு வழிவகுக்கும் வகையில், கரியமில வாயு வெளியேற்றத்தைத் தடுக்கவும், எரிசக்தி மாற்றுத் திட்டத்துக்காகவும் நோக்க அறிக்கை ஒன்றில் நிதி ஆயோக்கும், புதுடெல்லியில் உள்ள நெதர்லாந்து தூதரகமும் 2020 செப்டம்பர் 28 அன்று கையெழுத்திட்டன.

நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த் மற்றும் இந்தியாவுக்கான நெதர்லாந்து தூதர் மார்டன் வான் டேன் பெர்க் ஆகியோர் இந்த அறிக்கையில் கையெழுத்திட்டனர்.

கொள்கை வடிவமைப்பாளர்கள், தொழில் அமைப்புகள், உதிரி பாகங்கள் தயாரிப்பாளர்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் துறை சார்ந்த நிபுணர்கள் போன்ற பங்குதாரர்களை ஒருங்கிணைப்பதற்கான தளத்தை இந்த ஒப்பந்தத்தின் மூலம் நிதி ஆயோக்கும் நெதர்லாந்து தூதரகமும் உருவாக்கும்.

நிகழ்ச்சியில் பேசிய நிதி ஆயோக் துணைத் தலைவர் டாக்டர் ராஜிவ் குமார், "நீடித்த எரிசக்திக்கான உயர்ந்த இலக்குகளை இந்தியா மற்றும் நெதர்லாந்து ஆகிய இரு நாடுகளும் கொண்டுள்ளன. இரு நாடுகளும் இணைந்திருப்பதன் மூலம் ஒருவரது நிபுணத்துவத்தை மற்றொருவர் பயன்படுத்திக்கொள்ள முடியும்," என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 min ago

சுற்றுலா

34 mins ago

சினிமா

39 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

வணிகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்